மதுரை தவெக 2 ஆவது மாநில மாநாடு - 10 தீர்மானங்கள் நிறைவேற்றபடவுள்ளதாக தகவல்!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது மாநில மாநாடு கடந்தாண்டு அக்டோபர் 27-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, தற்போது 2-வது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி நடைபெறம் என்று அறிவிக்கபப்ட்டது.ஆனால் பின்னர் மாநாடு தேதி 21 ஆம் நாளைக்கு மாற்றப்பட்டது.
இதற்காக மதுரை பராபத்தியில் சுமார் 500 ஏக்கர் அளவில் அளவில் மாநாட்டிற்கான இடம் தேர்வு செய்யபப்ட்டு பணிகள் நடைபெற்றன. மேலும் பாதுகாப்பு காரணங்களுகாக மாநாட்டிற்கு காவல்துறையினர் பல்வேறு நிபந்தனைகள் விதித்துனர். மேலும் தவெகவும் கர்ப்பிணிகளையும், குழந்தைகளையும் உடன் அழைத்து வர வேண்டாம் என அறிவுறுத்தியது.
இந்த நிலையில் தவெக மதுரை பாரபத்தியில் நடக்கும் தவெக மாநாட்டில் 10 தீர்மானங்கள் நிறைவேற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் சிறப்பு வாக்காளர் திருத்தத்திற்கு எதிர்ப்பு, தூய்மை பணியாளர்கள் கைது,லாக்அப் மரணம், பரந்தூர் விமானநிலையம்,அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் உள்ளிட்டவை தொடர்பான 10 தீர்மானங்கள் நிறைவேற்றபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.