மதுரை | திருப்பரங்குன்றம் தர்காவில் கந்தூரி கொடுக்க மறுப்பு - திடீரென எழும்பிய ஆர்பாட்டம்!
மதுரை திருப்பரங்குன்றம் தர்காவில் கந்தூரி கொடுப்பதற்கு காவல்துறையினர் மறுப்பு தெரிவித்ததால் எஸ்டிபிஐ மற்றும் ஐக்கிய ஜமாத் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜபாளையம் மைலம் பட்டியை சேர்ந்த சையது அபுதாகிர் (53) தனது குடும்பத்தினருடன் திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள சிக்கந்தர் பாதுஷா சமாதியில் கந்தூரி கொடுப்பதற்கு கடந்த வாரம் ஆட்டு கிடாயுடன் வந்துள்ளார். அப்போது மலை மேல் உள்ள திருப்பரங்குன்றம் சிக்கந்தர் சமாதிக்கு செல்லும் வழியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் ஆட்டு கிடாயுடன் செல்ல அனுமதி இல்லை என கூறியுள்ளார். ஆகையால் அருகில் இருந்தவர்கள் பள்ளிவாசல் மற்றும் இதர இஸ்லாமிய அமைப்புகளுக்கு தகவல் அளித்தனர்.
இந்நிலையில், இன்று (ஜன. 6) திருப்பரங்குன்றம் சிக்கந்தர் பள்ளிவாசல் செல்ல மற்றும் நேர்த்திக்கடன் நிறைவேற்ற செய்ய தடை விதித்தனர் என காவல்துறை மற்றும் திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியரை கண்டித்து, ஸ்டிபிஐ, ஜமாத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் ஒன்று சேர்ந்து திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதால் 100க்கும் மேற்பட்ட பெண்கள் என 300க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியதில் அமைதியாக கலைந்து சென்றனர்.