Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Madurai | "கடன் தீர்ப்பாயத்தின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை" - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து

04:10 PM Oct 05, 2024 IST | Web Editor
Advertisement

மத்திய அரசின் கீழ் செயல்படும் கடன் தீர்ப்பாயத்தின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

Advertisement

திருச்சியைச் சேர்ந்த தனபாலன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில், "நான் திருச்சியில் தனியார் நிறுவனம் நடத்த கனரா வங்கியில் சுமார் ரூ.1.7 கோடி கடன் பெற்றிருந்தேன். இந்த நிலையில் நான் கடனை முறையாக செலுத்தவில்லை என்று மதுரையில் உள்ள கடன் மீட்பு தீர்ப்பாயத்தில் வங்கி சார்பில் பொய்யான தகவல்கள் அளிக்கப்பட்டது. கடன் மீட்பு தீர்ப்பாயத்தில் பல உத்தரவுகளை பெற்று எனது சொத்துக்களை ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதால், இந்த ஏலத்திற்கு தடை விதிக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய நிதித்துறை செயலரை நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கில் சேர்ப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், "மத்திய அரசின் கீழ் செயல்படும் கடன் தீர்ப்பாயத்தின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை. கடன் தீர்ப்பாயத்தின் அலுவலர் விடுப்பில் சென்றால், அவரின் பணிகளை எவ்வாறு சமன் செய்வது என்பதற்கான மாற்று வழிகளை எடுப்பதிலும் மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள கடன் தீர்ப்பாயத்தில் காலியாக இருக்கும் பணியிடங்கள் எத்தனை? அவற்றை நிரப்புவதற்கான எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது தொடர்பாக மத்திய நிதித்துறை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags :
High courtHigh court BranchMadurainews7 tamil
Advertisement
Next Article