Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மதுரை மேயரின் கணவர் கைது - பாஜகவின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி ...நயினார் நாகேந்திரன்!

மதுரை மாநகராட்சி மேயர் கணவரின் கைது பாஜகவின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
03:18 PM Aug 13, 2025 IST | Web Editor
மதுரை மாநகராட்சி மேயர் கணவரின் கைது பாஜகவின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
Advertisement

தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடிக்கும் மேலான வரி முறைகேடு தொடர்பாக மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்தை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்திருப்பது
திராவிட அரசின் ஊழல் முகத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளது.

Advertisement

நமது பாஜக முன்னெடுத்த மாபெரும் கண்டன போராட்டம் மற்றும் தொடர் அழுத்தத்தின் விளைவாக இந்த கைது சாத்தியமாகியுள்ள நிலையில் இது நமது தாமரை சொந்தங்களின் அரும்முயற்சிக்கு கிடைத்த வெற்றியே. ஆனால் மக்கள் நலனுக்கான நமது அறப்பணி இதோடு முடியப்போவதில்லை. மதுரை மாநகராட்சியின் வரி முறைகேட்டின் பின்னுள்ள அனைத்து அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் கைது செய்யப்பட்டு, ஊழலில் ஊறித்திளைக்கும் திராவிட மாடல் அரசை வீட்டுக்கு அனுப்பும் வரை தமிழக பாஜக ஓயாது! இது உறுதி! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
arrestedBJP'sMaduraiMayorhusbandNayinar NagendranProtest
Advertisement
Next Article