Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மதுரை கீழக்கரை ஜல்லிக்கட்டு: 500 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு!

04:18 PM Jan 23, 2024 IST | Web Editor
Advertisement

மதுரை கீழக்கரை அரங்கத்தில் நாளை நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் 500 காளைகள்,  300 மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.  

Advertisement

ஜல்லிக்கட்டுக்கு உலக புகழ் பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்படும் என சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.  அதன்படி கீழக்கரை கிராமத்தில்,  வகுத்துமலை அடிவாரத்தில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் ஜல்லிக்கட்டு மைதான பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்தன.

கடந்த வாரம் இந்த பணிகள் நிறைவு பெற்ற நிலையில் ஜல்லிக்கட்டு அரங்கத்தை நாளை (ஜன.24) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.  இதனைத்தொடர்ந்து அந்த அரங்கத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெற இருக்கின்றன.  இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்கள்,  காளைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு ஜன.19-ம் தேதி தொடங்கியிருந்தது.

இதையும் படியுங்கள்: மிசோரம் அருகே மியான்மர் ராணுவ விமானம் விபத்து: 6 பேர் படுகாயம்!

தொடர்ந்து,  ஜல்லிக்கட்டில் பங்கேற்க 9,312 காளைகள் மற்றும் 3,669 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்திருந்தனர்.  இந்த நிலையில் 500 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.  தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆன்லைன் வாயிலாக அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Tags :
alanganallurCMO TamilNaduDMKJallikattujallikattu 2024MaduraiMK Stalinnews7 tamilNews7 Tamil Updates
Advertisement
Next Article