For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மதுரை தனக்கன்குளம் அந்தோணியர் ஆலய கொடியேற்றம் - ஏராளமானோர் பங்கேற்பு!

08:09 AM Jun 24, 2024 IST | Web Editor
மதுரை தனக்கன்குளம் அந்தோணியர் ஆலய கொடியேற்றம்   ஏராளமானோர் பங்கேற்பு
Advertisement

40 ஆண்டுகள் பழமை வாய்ந்த அற்புதர் அந்தோணியர் ஆலயத்தில் ஒரு நாள் நடைபெறும் திருத்தேரோட்டத்திற்கான கொடியேற்றம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.  

Advertisement

மதுரை தனக்கன்குளத்தில் 1982ம் ஆண்டில் கட்டப்பட்ட 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த
கோடி அற்புதர் அந்தோனியர் ஆலயம் உள்ளது.  இடிபாடு நிலையிலிருந்த இந்த ஆலயம் அங்குள்ள கிறிஸ்தவர்கள் உதவியுடன் முழுவதுமாக புனரமைக்கப்பட்டுள்ளது.  இந்த அந்தோனியார் ஆலயத்தில் மிகவும் விசேஷமாக நடைபெறும் ஒரு நாள் கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த விழாவில் ஒன்பது அருட்செல்வர் உடன் பாதர் ராக் கலந்து கொண்டு,  திருத்தேரோட்டத்திற்கான கொடியை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார்.  இதில் 500க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு உலக நன்மை வேண்டியும்,  நாட்டின் பொருளாதாரம் செழிக்க வேண்டியும் பிரார்த்தனை மேற்கொண்டனர்.

மேலும்,  இந்த ஆலய புனரமைப்பில் ஈடுபட்டவருக்கும், கொடியேற்றத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் பாதர் ஜார்ஜ் எட்வின் வாழ்த்து தெரிவித்தார்.  பின்னர் பிரார்த்தனையில் ஈடுபட்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

Tags :
Advertisement