For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"சித்திரைத் திருவிழா தொடர்பான புகார்களை தெரிவிக்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை" - மதுரை ஆட்சியர் சங்கீதா!

09:49 AM Apr 19, 2024 IST | Web Editor
 சித்திரைத் திருவிழா தொடர்பான புகார்களை தெரிவிக்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை     மதுரை ஆட்சியர் சங்கீதா
Advertisement

சித்திரைத் திருவிழா தொடர்பான புகார்களை தெரிவிக்க 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டறை அமைக்கப்பட்டுள்ளதாக மதுரை ஆட்சியர் சங்கீதா தெரிவித்தார்.

Advertisement

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மாதந்தோறும் திருவிழாக்கள் நடைபெற்றாலும், சித்திரை மாதம் நடைபெறக்கூடிய சித்திரை திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி, உலகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பக்தர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் திருவிழாவாக சித்திரை திருவிழா அமைந்துள்ளது.

இதையும் படியுங்கள் : மக்களவை தேர்தல் 2024 : தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு தொடங்கியது!

இந்த ஆண்டு,  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா,  ஏப்ரல் 12 முதல் 23-ம் தேதி வரை 12 நாட்கள் கொண்டாடப்படவுள்ள நிலையில்,  ஏப்ரல் 12-ம் தேதி சித்திரை திருவிழாவுக்கான கொடியேற்ற நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.  இந்த சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான மீனாட்சி திருக்கல்யாணம் ஏப்.21ம் தேதியும், வைகையில் அழகர் இறங்கும் வைபவம் ஏப்ரல் 23-ம் தேதியும் நடைபெற உள்ளது.

இந்நிலையில்,  சித்திரைத் திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் பாதுக்காப்பு கருதி,  முதல் முறையாக சித்திரைத் திருவிழா தொடர்பான புகார்களை தெரிவிக்க 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாறை அமைத்து மதுரை ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 20ம் தேதி முதல் 25ம் தேதி வரை உள்ள நாட்களில் 24x7 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சித்திரைத் திருவிழா தொடர்பான புகார்களை 99949 09000 மற்றும் 0452-2526888 ஆகிய தொலைபேசி எண்கள் வாயிலாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் சித்திரை திருவிழா கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கலாம் என ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement