Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தொடக்கம்!

11:55 AM Mar 05, 2024 IST | Web Editor
Advertisement

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை L&T நிறுவனம் வாஸ்து பூஜையுடன் இன்று (மார்ச்.05) தொடங்கியது.

Advertisement

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு 2018 ஆம் ஆண்டு டிசம்பரில் ஒப்புதல் அளித்தது.  இதனைத் தொடர்ந்து,  2019 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.  அடிக்கல் நாட்டப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை சுற்று சுவர்கள் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டு இருந்த நிலையில் எந்த ஒரு பணிகளும் மேற்கொள்ளபடாமல் இருந்தது.

இந்த நிலையில்,  L&T நிறுவனம் கட்டுமான பணிகளை வாஸ்து பூஜையுடன் இன்று தொடங்கியது.  மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 10 தளங்களுடன்,  870 படுக்கை வசதிகள்,  38 படுக்கைகளுடன் கூடிய ஆயுர்வேத சிகிச்சை மையம், மாணவர்கள், செவிலியர்களுக்கென வகுப்பறை கட்டடம்,  ஆய்வகக்கூடங்கள் என ரூ.1977.80 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ளது.  33 மாதங்களில் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை முடிக்க L&T நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Tags :
AIIMSLT ConstructionMaduraiMadurai AIIMSpm narendra modiPMO India
Advertisement
Next Article