For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"#Narmada ஆற்றில் இயந்திரங்களைப் பயன்படுத்தி சுரங்கப் பணிகள் மேற்கொள்ளக்கூடாது" - ம.பி.முதலமைச்சர் திட்டவட்டம்!

07:08 PM Sep 14, 2024 IST | Web Editor
  narmada ஆற்றில் இயந்திரங்களைப் பயன்படுத்தி சுரங்கப் பணிகள் மேற்கொள்ளக்கூடாது    ம பி முதலமைச்சர் திட்டவட்டம்
Advertisement

நர்மதா ஆற்றில் இயந்திரங்களைப் பயன்படுத்தி சுரங்கப் பணிகள் எதுவும் மேற்கொள்ளக்கூடாது என மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் கூறியுள்ளார்.

Advertisement

நர்மதா நதி குறித்த செயல் திட்டத்தை உருவாக்குவதற்கு முதலமைச்சர் மோகன் யாதவ் தலைமையில் மத்திய பிரதேசத்தில் இன்று (செப். 14) அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மோகன் யாதவ் பேசியதாவது,

“நர்மதா நதியின் பிறப்பிடமான அமர்கண்டக், அந்த நகர நிர்வாகத்தின் மூலமாக நிர்வகிக்கப்பட வேண்டும். அப்பகுதியில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். நர்மதா நதிக்கு மிகவும் தொலைவில் ஒரு செயற்கைகோள் நகரம் உருவாக்கப்பட வேண்டும். நதியைச் சுற்றியுள்ள குடியிருப்புகள் முதல் மாநில எல்லைகள் வரை, யாரும் கழிவுநீரை ஆற்றில் விடக்கூடாது. திடக்கழிவு மேலாண்மைக்கு நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும்.

இதையும் படியுங்கள் :“சீன நிறுவனங்களில் செபி தலைவர் முதலீடு செய்து வருகிறார் என பிரதமர் மோடிக்கு தெரியுமா?” – #Congress கேள்வி!

சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக, செயற்கைக்கோள், ட்ரோன் தொழில்நுட்பம் மூலம் நர்மதா நதியைச் சுற்றி நடக்கும் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட வேண்டும். நர்மதை நதியை ஒட்டியுள்ள புனித நகரங்களிலும், மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் இறைச்சி, மதுபானங்கள் உட்கொள்ளப்படுவதில்லை என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். ஆற்றில் இயந்திரங்களைப் பயன்படுத்தி சுரங்கப் பணிகள் எதுவும் மேற்கொள்ளக்கூடாது"

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
Advertisement