For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கேம்பஸ் இன்டர்வியூவில் கிடைத்த வேலையை உதறினாலும் சாதித்த பெண்: IIMA நெகிழ்ச்சிப் பதிவு!

01:47 PM Apr 02, 2024 IST | Web Editor
கேம்பஸ் இன்டர்வியூவில் கிடைத்த வேலையை உதறினாலும் சாதித்த பெண்  iima நெகிழ்ச்சிப் பதிவு
Advertisement

கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் கிடைத்த வேலையை தவிர்த்த மாதபி புரி,  தற்போது செபியின் முதல் பெண் தலைவராக பொறுப்பேற்று சாதனை படைத்துள்ளார் என IIMA தெரிவித்துள்ளது.

Advertisement

இந்தியாவின் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (SEBI) தலைவராக கடந்த 2022 ஆம் ஆண்டு மாதபி பூரி புச் பொறுப்பேற்றார்.  பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் முதல் பெண் தலைவர் என்ற சிறப்பையும் மாதபி பூரி புச் பெற்றுள்ளார்.  இது மட்டுமின்றி இந்தியாவில் உள்ள நிதி சந்தை கட்டுப்பாட்டாளரையும் வழிநடத்தும் முதல் பெண்மணியும் ஆவார்.

இதையும் படியுங்கள் : “கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்க இந்திய அரசு எந்த கோரிக்கையும் வைக்கவில்லை” – இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் பேட்டி

இவர் மும்பை மற்றும் டெல்லியில் தனது பள்ளி படிப்பை முடித்தார்.  செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் கணிதம் படத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.  இதையடுத்து,  அகமதாபாத்தில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் (IIM)   1988 ஆம் ஆண்டு MBA பட்டப்படிப்பை படித்தார்.

பின்னர்,  அவர் 1989 ஆம் ஆண்டு ஐசிஐசிஐ வங்கியில் பணிக்கு சேர்ந்தார்.  புச் தனது வாழ்கையில் பெரும்பகுதியை ஐசிஐசிஐ வங்கியில் ஐசிஐசிஐ ஹவுசிங் ஃபைனான்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி,  ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் உட்பட பல்வேறு பதவிகளில் பணியாற்றினார்.  இதையடுத்து, Max Healthcare, InnoVen Capital, Zensar Technologies மற்றும் Idea Cellular உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் குழுவில் அவர் பணியாற்றியுள்ளார்.  புச் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக செபியின் முழு நேர உறுப்பினராகவும் 2017 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை இருந்துள்ளார்.

இந்நிலையில்,  அவர் பயின்ற கல்லூரின் பட்டமளிப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர்.  அந்த நிகழ்ச்சியில் இவரை பெருமைபடுத்தும் வகையில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.  இதன் பின், இவர் பள்ளி காலம் முதல் கடந்து வந்த அனைத்தையும்  தொகுத்து வழங்கினர்.

இது தொடர்பாக IIMA வின்  X தள பதிவில் தெரிவித்திருப்பதாவது :

இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் ( செபி ) தற்போதைய தலைவரான மதாபி பூரி புச்,  நிறுவனத்தை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற சாதனையை படைத்துள்ளார்.  ஐஐஎம்-அமதாபாத் இன் முன்னாள் மாணவியான இவர்,  கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பில் முகாமில் கிடைத்த வேலையை விட்டுவிட்டு தனது கனவை நோக்கி சென்றார்.  தற்போது இவர் நாட்டின் முதன்மையான நிறுவனமான, செபியின் முதல் பெண் தலைவராக பொறுப்பேற்று சாதனை படைத்துள்ளார்.

Tags :
Advertisement