Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"கூட்டணிக்காக விவசாயிகள் நலனை அடகு வைத்து விட்டார் மு.க.ஸ்டாலின்" - அண்ணாமலை கண்டனம்!

03:39 PM Jun 13, 2024 IST | Web Editor
Advertisement

கூட்டணி நலனுக்காக,  தமிழ்நாடு விவசாயிகளின் நலனை அடகு வைத்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement

கூட்டணி நலனுக்காக தமிழ்நாடு விவசாயிகள் நலனைப் புறக்கணிப்பதை நிறுத்திக் கொண்டு காவிரி நீரில் தமிழ்நாட்டின் பங்கைப் பெற்றுத் தரும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.  இது தொடர்பாக அவர் இன்று தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது :

"காவிரி நீரில்,  கடந்த ஆண்டு கிடைக்கப் பெற்ற தண்ணீரின் அளவு 81.4 டிஎம்சி மட்டுமே. ஆண்டிற்கு 177.25 டிஎம்சி தண்ணீர் பெற்றிருக்க வேண்டிய தமிழ்நாடு,  அதில் பாதி அளவைக் கூட பெறவில்லை என்பது,  திமுக அரசின் கையாலாகாத்தனத்தைக் காட்டுகிறது.  திமுக காங்கிரஸ் சந்தர்ப்பவாத இந்தி கூட்டணியின் நலனுக்காக,  தமிழ்நாடு விவசாயிகளின் நலனை மொத்தமாக அடகு வைத்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

இதையும் படியுங்கள் : புரி ஜெகந்நாதர் கோயிலின் 4 கதவுகளும் 4 ஆண்டுகளுக்குப் பின் திறப்பு!

காவிரியில் குறித்த அளவு நீர்வரத்து இல்லாததால்,  இந்த ஆண்டு ஜூன் 12 அன்று, விவசாயத்திற்காகத் திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை திறக்கப்படாமல், பாசனத்துக்கு நீர் இன்றி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.  ஆனால், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு இது குறித்த எந்தக் கவலையும் இல்லை.  தன்னை ஒரு டெல்டாக்காரன் என்று கூறிவிட்டு , வயலில் கான்கிரீட் சாலை அமைத்து நடக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு,  விவசாயிகள் வேதனை எப்படிப் புரியும்?

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,  தனது கூட்டணி நலனுக்காக,  தமிழ்நாடு விவசாயிகள் நலனைப் புறக்கணிப்பதை நிறுத்திக் கொண்டு,  உடனடியாக, காவிரி நீரில் தமிழ்நாட்டின் பங்கைப் பெற்றுத் தரும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்"

இவ்வாறு அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags :
ALLIANCEAnnamalaiBJPCMOTamilNaducondemnedDMKfarmersMKStalinwelfare
Advertisement
Next Article