For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த 3ம் வகுப்பு சிறுமி - #CardiacArrest ஏற்பட்டு உயிரிழப்பு!

07:25 AM Sep 15, 2024 IST | Web Editor
பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த 3ம் வகுப்பு சிறுமி    cardiacarrest  ஏற்பட்டு உயிரிழப்பு
Advertisement

லக்னோவில் 3ஆம் வகுப்பு பயிலும் மாணவி பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

லக்னோவில் உள்ள மான்ட்ஃபோர்ட் பள்ளியில், 3ஆம் வகுப்பு படிக்கும் மாணவி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, உயிரிழந்ததாக அப்பள்ளியின் முதல்வர் நேற்று தெரிவித்தார். மான்வி சிங் என்ற 9 வயது சிறுமி பள்ளியின் விளையாட்டு மைதானத்தில், தனது சக மாணவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தாள். உடனே ஆசிரியர்கள் அருகில் உள்ள பாத்திமா மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்து சென்றுள்ளனர்.

பின் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டதும், மருத்துவமனைக்கு அவர்கள் விரைந்தனர். இதனைத் தொடர்ந்து அருகிலுள்ள வேறு மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் காவல்துறையினர் கவனத்திற்கு சென்றும், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சிறுமியின் பெற்றோர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

கார்டியாக் அரெஸ்ட்

மருத்துவர்கள் இதை இதயத் துடிப்பு முடக்கம் எனக் கூறுவர். எந்த வித அறிகுறி இல்லாமலும் கூட  இந்தப் பிரச்னை வரலாம். நமது இதயம் குறிப்பிட்ட கால அளவுக்கு ஏற்றவாறு, சீரான அளவில் துடிக்கும்போதுதான் சரியாக அளவில் ரத்தத்தை கடத்தும். அவ்வாறு இதயம் சீராக செயல்படும்போதுதான் மூளை, நுரையீரல், சிறுநீரகம் என அத்தனை பகுதிக்கும்  சீராக இரத்தம் செல்லும்.

இந்த சுழற்சியில் திடீரென மாற்றம் ஏற்படும்போது சீரற்ற இதயத் துடிப்பு ஏற்படும். இவ்வாறு சீரற்ற இதயத் துடிப்பு ஏற்படுவதற்கு பல காரணிகள் உண்டு. அதில் ஒரு காரணி தான் மாரடைப்பு. கிட்டத்தட்ட மரணம் அடைபவர்கள் அனைவருக்குமே கடைசி நேரத்தில் உடனடியாக கார்டியாக் அரெஸ்ட் வந்து  இறப்பார்கள்.

Tags :
Advertisement