For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வயநாடு தேயிலை தொழிலாளர்களுடன் பிரியங்கா காந்தி என வைரலாகும் படம் - உண்மை என்ன?

10:11 PM Nov 20, 2024 IST | Web Editor
வயநாடு தேயிலை தொழிலாளர்களுடன் பிரியங்கா காந்தி என வைரலாகும் படம்   உண்மை என்ன
Advertisement

This news Fact Checked by ‘Newsmeter

Advertisement

வயநாடு இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி தேயிலை தோட்ட தொழிலாளர்களுடன் தேயிலை பறித்ததாக சமூக வலைதளங்களில் படங்கள் வைரலானது இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை விரிவாக காணலாம்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி மக்களவைத் தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டார். ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்ட நிலையில் இரண்டிலுமே வெற்றி பெற்றார். இதனால், வயநாடு தொகுதி எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜிநாமா செய்தார்.இதையடுத்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் அக் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சத்யன் மோக்கேரி, பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் உள்ளிட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர். நவம்பர் 13ம் தேதி நடைபெற்ற தேர்தலில்  62.39% வாக்குகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்தின்போது வயநாட்டில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் பிரியங்கா காந்தி தேயிலை பறிப்பது போன்ற புகைப்படம் வைரலானது. பேஸ்புக் பயனர் ஒருவர் "மிகவும் அழகான #வயநாடு" என்ற தலைப்பில் படத்தைப் பகிர்ந்துள்ளார். புகைப்படத்தில் பிரியங்கா காந்தி தனது முதுகில் ஒரு கூடையுடன், தலையில் பட்டையால் கட்டப்பட்ட நிலையில் காணப்படுகிறார்.

உண்மை சரிபார்ப்பு :

சமூக வலைதளங்களில் வெளியான இப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலுக்கு உட்படுத்தியபோது அதன் முடிவில் இப்படம் மார்ச் 2, 2021 அன்று பிரியங்கா காந்தியின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட படம் கண்டறியப்பட்டது. அஸ்ஸாமில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுடன் தேயிலை இலைகளை பறிக்கும் படங்கள் அப்பதிவில் இடம்பெற்றிருந்தன.

அசாமின் பிஸ்வநாத் மாவட்டத்தில் உள்ள சதுரு தேயிலை தோட்டத்தில் பிரியங்கா காந்தி 2021 ஆம் ஆண்டு பிரச்சாரம் செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் The Quint பத்திரிகையின் மற்றொரு அறிக்கையிலும் அஸ்ஸாம் சென்றிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதை உறுதிப்படுத்தியது.

முடிவு :

வயநாடு இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி தேயிலை தோட்ட தொழிலாளர்களுடன் தேயிலை பறித்ததாக சமூக வலைதளங்களில் படங்கள் வைரலானது. உண்மை சரிபார்ப்பில் அது 2021ம் ஆண்டு அஸ்ஸாமில் எடுக்கப்பட்ட படம் என்றும் இப்பதிவு தவறாக பரப்பப்பட்டுள்ளது என்றும் உறுதியாகியுள்ளது.

Note : This story was originally published by ‘Newsmeter’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Advertisement