LSGvsPBKS | பிரப்சிம்ரன் சிங்கின் அதிரடி - லக்னோவுக்கு 237 ரன்கள் இலக்கு!
நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணி, ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ அணியை எதிர்கொண்டு வருகிறது. தர்மஷாலா மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய பஞ்சாப் அணியில் பிரியான்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் களமிறங்கினர். இதில் 1 ரன்களில் பிரியான்ஷ் ஆர்யா ஆட்டமிழந்தார். இதையடுத்து அதிரடியாக பிரப்சிம்ரன் சிங் விளையாடி வந்தார். தொடர்ந்து இவருடன் கைகோர்த்த ஜோஷ் இங்கிலிஸ் 30 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.
அடுத்ததாக பிரப்சிம்ரன் சிங் உடன் பார்ட்னர்ஷிப்பில் இணைந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 45 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இதனிடையே ஆரம்பத்தில் இருந்து அதிரடி காட்டி வந்த பிரப்சிம்ரன் சிங் 91 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதன் பின்பு நேஹல் வதேரா 16 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து வந்த ஷஷாங்க் சிங் 33* ரன்களும், மார்கஸ் ஸ்டோய்னிஸ் 15* ரன்களும் எடுத்தனர். 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணி 236 ரன்கள் குவித்தது. தொடர்ந்து 237 என்ற இலக்கை லக்னோ அணி சேஸிங் செய்து வருகிறது.