LSGvsDC | டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சு தேர்வு!
18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்று(மார்ச்.22) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கோலாகலமாக கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய நிலையில், இன்று(மார்ச். 24) டெல்லி மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் 7.30 மணிக்கு நடைபெற்ற உள்ளது.
இந்த நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. லக்னோ அணி சார்பில் ரிஷப் பண்ட் (கேப்டன்), மார்க்ராம், நிக்கோலஸ் பூரன், டேவிட் மில்லர், ஆயுஷ் படோனி, ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், பிரின்ஸ் யாதவ், ரவி பிஷ்னோய், திக்வேஷ் சிங் ஆகியோர் விளையாட உள்ளனர்.
அதே போல் டெல்லி அணி சார்பில், ஃபாஃப் டு பிளெசிஸ், ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல், அக்சர் படேல் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், சமீர் ரிஸ்வி, விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், மோஹித் சர்மா, முகேஷ் குமார் ஆகியோர் விளையாட உள்ளனர்.