LSG vs MI - மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 215ரன்கள் இலக்கு!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 215 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி.
2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கி பல்வேறு மைதானங்களில் நடைபெற்று வருகிறது. இதுவரை 65 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு கொல்கத்தா அணி முதலாக முன்னேறியது. அதனையடுத்து ராஜஸ்தான் அணி முன்னேறியது. பஞ்சாப், குஜராத், மும்பை அணிகள் அதற்கான தகுதியினை இழந்தன.
இந்நிலையில் மீதமுள்ள சென்னை, பெங்களூரு, லக்னோ, டெல்லி, ஹைதராபாத் அணிகளில், எந்த இரண்டு அணிகள் ப்ளே ஆஃப்க்கு தகுதிபெறும் என்ற எதிர்பார்ப்புகளுடன் ஐபிஎல் லீக் போட்டிகள் தீவிரமாக சென்று கொண்டிருக்கிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 67-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனைத் தொடர்ந்து தொடக்க ஆட்டக்காரர்களாக அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் படிக்கல் ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரின் மூன்றாவது பந்தில் படிக்கல் டக் அவுட் ஆகி வெளியேறினார். மார்கஸ் ஸ்டொய்னிஸுடன் கரம் கோர்த்த கே.எல்.ராகுல் அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்துவதில் கவனம் செலுத்தினார். இதனிடையே ஸ்டொய்னிஸ் 28 ரன்களுக்கு ஆட்டமிழக்க அடுத்து வந்த ஹூடேவும் 11ரன்களுக்கு நேஹல் வதேராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இதனைத் தொடர்ந்து பாட்னர்ஷிப் சேர்ந்த கே.ராகும் மற்றும் பூரான் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை மளமளவென உயர்த்தியது. பூரான் 29பந்துகளுக்கு 75ரன்களை எடுத்து அவுட் ஆனார். இதனைத் தொடர்ந்து கே.எல்.ராகுலும் 55ரன்கள் எடுத்து பியூஸ் சாவ்லா பந்தில் ஆட்டமிழந்தார். 20ஓவர்களின் முடிவில் லக்னோ அணி 6விக்கெட்களை இழந்து 214ரன்களை குவித்தது. இந்த நிலையில் மும்பை அணிக்கு 215ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.