வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி - 24 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்பு!
வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரைகளை ஒட்டியுள்ள மேற்கு மத்திய மற்றும் வடமேற்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் இன்று காலை 8.30 மணியளவில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
இது மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்திற்குள் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆகஸ்ட் 19, 2025 அன்று அதிகாலை தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த வானிலை மாற்றம், ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இந்த அமைப்பானது வெகு தொலைவில் இருப்பதால், நேரடியான பாதிப்புகள் குறைவாக இருக்கும். இருப்பினும், கடலோர மாவட்டங்களில் லேசான சாரல் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த வானிலை மாற்றம், தென்மேற்குப் பருவமழையின் செயல்பாட்டை மேலும் வலுப்படுத்தும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.