பழனியில் காலாவதியான பஞ்சாமிர்தம் கொண்டு சென்ற லாரி சிறைபிடிப்பு!
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சார்பில் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. கோயில் நிர்வாகம் சார்பில் நவீன எந்திரங்கள் மூலம் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டு மலை மீது குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில், 66 கேன்களில் பஞ்சாமிர்தம் நிரப்பப்பட்டு லாரி மூலம் வெளியே கொண்டு சென்ற போது பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் லாரியை சிறை பிடித்தனர். மேலும் அவை காலாவதியான பஞ்சாமிர்தமா? அல்லது மலைக்கோயிலில் தயாரிக்கப்பட்டு சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்படும் கடத்தல் பஞ்சாமிர்தமா? என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அடிவாரம் போலீசார் லாரியை சிறைப்பிடித்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தின்ர். பின்னர், லாரியை காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இந்த காலாவதியான பஞ்சாமிர்தங்கள் ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தையம் பகுதியில் உள்ள கோயிலுக்கு சொந்தமான கோசாலையில், வைத்து அழிப்பதற்காக கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.