For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஆலங்குடி ஐயப்பன் கோயிலில் 'யானை வாகனத்தில் எழுந்தருளிய ஐயப்பன்' - விமரிசையாக நடைபெற்ற வீதி உலா!

09:47 AM Dec 26, 2024 IST | Web Editor
ஆலங்குடி ஐயப்பன் கோயிலில்  யானை வாகனத்தில் எழுந்தருளிய ஐயப்பன்    விமரிசையாக நடைபெற்ற வீதி உலா
Advertisement

புதுக்கோட்டை ஆலங்குடி ஐயப்பன் கோயிலில் யானை வாகனத்தில் எழுந்தருளிய ஐயப்பன் சுவாமியின் வீதி உலா உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

Advertisement

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நகரில் பழமையான ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. இந்த திருகோயிலில் கார்த்திகை மாதம் தொடங்கியது முதலே பக்தர்கள் பலரும் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருந்து வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கூட்டு பஜனை வழிபாடு, திருவிளக்கு பூஜை என பல்வேறு வழிபாடுகள் ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்று வந்த நிலையில், ஐயப்பன் வீதி உலா உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

அப்போது அலங்கரிக்கப்பட்ட ஐயப்ப சுவாமியின் மூலவர் யானை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா உற்சவம் மாலையில் தொடங்கி ஆலங்குடி நகரின் ஒவ்வொரு தெருவின் வழியாகவும் சென்றது. மேலும் இரவு நேரத்தில் ஆலங்குடி நகரின் பிரதான பகுதிகளான வடகாடு முக்கம், அரசமரம் உள்ளிட்ட பகுதிகளில் வீதி உலா வந்த போது நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் பெண்கள் மற்றும் பொதுமக்கள் என சாலைகளே ஸ்தம்பிக்கும் அளவிற்கு வீதி உலா வெகு உற்சாகமாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து ஐயப்பன் கோயில் சென்றடைந்த சுவாமி ஐயப்பனுக்கு கருப்பசாமி துள்ளல் நிகழ்வில் குருசாமி, சிறுவர்கள், மற்றும் ஐயப்ப பக்தர்களுக்கு அருள் வந்து சாமி ஆடிய நிகழ்வு பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. இந்த நிகழ்வினை தொடர்ந்து ஐயப்பனை தொட்டிலில் வைத்து சிறப்பு ஆராதனை நிகழ்வுகளும், புஷ்பாஞ்சலி பூஜைகளும் வழிபாட்டு பிரார்த்தனைகளும் மிகவும் விமர்சியாக நடைபெற்றது.

இதனை முன்னிட்டு ஐயப்பன் கோயிலில் அமைந்துள்ள 18 படிகளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு படி பூஜையும் விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு பஜனை பாடல்கள் பாடி சாமி தரிசனம் செய்தனர். இந்த வீதி உலாவின் பொழுது ஆலங்குடி போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

Tags :
Advertisement