For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

UPSC தேர்வில் முறைகேடாக தேர்ச்சி பெற்றேனா? ஓம் பிர்லா மகள் அவதூறு வழக்கு!

04:21 PM Jul 23, 2024 IST | Web Editor
upsc தேர்வில் முறைகேடாக தேர்ச்சி பெற்றேனா  ஓம் பிர்லா மகள் அவதூறு வழக்கு
Advertisement

யுபிஎஸ்சி தேர்வில் முறைகேடாக தேர்ச்சி பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டை எதிர்த்து மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவின் மகள் அஞ்சலி பிர்லா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

Advertisement

மக்களவை சபாநாயகராக தொடர்ந்து 2 ஆவது முறையாக பாஜக எம்.பி ஓம் பிர்லா தேர்வாகியுள்ளார்.  39 ஆண்டுகளுக்கு பின்னர் இரண்டு முறை மக்களவை சபாநாயகர் ஆன பெருமையை ஓம் பிர்லா பெற்றுள்ளார். கடந்த 1991 ஆம் ஆண்டு அமிதா பிர்லாவை திருமணம் செய்து கொண்ட ஓம் பிர்லாவுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவரது இளைய மகள் அஞ்சலி பிர்லா மாடலிங் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

பின்னர், கடந்த 2019 ஆம் ஆண்டு தனது முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றார். தொடர்ந்து பயிற்சி பெற்று ஐ.ஏ.எஸ் ஆன அஞ்சலி பிர்லா தற்போது ரயில்வே அமைச்சகத்தின் கீழ் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்த அஞ்சலி பிர்லா தனது தந்தையின் செல்வாக்கினால் தேர்வு எழுதாமலேயே ஐ.ஏ.எஸ் ஆனதாக சமூக வலைத்தளங்களில் பலர் குற்றஞ்சாட்டினர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், இத்தகைய குற்றச்சாட்டுகளை அஞ்சலி பிர்லா மறுத்துள்ளார்.

இதையும் படியுங்கள் :“கடத்தல் தங்கம் கொண்டு வருவது குறையும்” – நியூஸ் 7 தமிழுக்கு ஜெயந்திலால் சலானி பேட்டி!

தன் மீது அவதூறு பரப்ப வேண்டும் என்று நோக்கத்தில் தான் இத்தகைய குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாக அவர் தெரிவித்தார். இந்நிலையில், தன் மீது அவதூறு பரப்பும் இத்தகைய சமூக வலைத்தள பதிவுகளை நீக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் அஞ்சலி பிர்லா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

டெல்லி உயர்நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ள மனுவில், "எக்ஸ் உள்ளிட்ட இணையதளங்களில் தான் முறைகேடாக தேர்ச்சி பெற்றதாக பதிவிட்டு தனக்கும், தந்தையின் நற்பெயருக்கும் களங்கும் விளைவிக்கும் விதமாக பல்வேறு பதிவுகள் வெளியாகியுள்ளது, அதனை உடனடியாக நீக்க உத்தரவிட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement