Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

 மக்களவை தேர்தல் : தகுதியான வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க அண்ணாமலைக்கு டெல்லி தலைமை உத்தரவு!

12:40 PM Jan 21, 2024 IST | Web Editor
Advertisement

 39 தொகுதிகளில் போட்டியிட தகுதிவாய்ந்த மூன்று நபர்களை தேர்ந்தெடுத்து பட்டியலை அனுப்ப தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு டெல்லி பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement

இன்னும் ஓரிரு மாதங்களில் மக்களவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு தேர்தல் ஆணையம் மூலம் அறிவிக்கப்படும். இந்நிலையில், தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. காங்கிரஸ் உள்பட 28 கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்நிலையில், கட்சியின் கூட்டணிகள் குறித்தும், வேட்பாளர்கள் குறித்தும் முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் பணிகளை துவங்க பாஜக தலைவர் அண்ணாமலைக்கு டெல்லி பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தல் பார்வையாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் சட்டமன்ற பொறுப்பாளர்கள், பார்வையாளர்கள் தற்பொழுது நியமிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விரைவில் நாடாளுமன்ற தேர்தலில் நடைபெற உள்ள நிலையில்  வெற்றி வாய்ப்புள்ள நாடாளுமன்ற வேட்பாளர்கள் மூன்று பேர் கொண்ட பட்டியலை தயாரித்து அனுப்புமாறு அண்ணாமலையிடம் கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த மாத இறுதிக்குள் பட்டியலை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags :
AnnamalaiBJPCandidatesconstituenciesElectionLok Sabha Elections 2024News7Tamilnews7TamilUpdates
Advertisement
Next Article