Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மக்களவைத் தேர்தல் 2024 : தற்போது வரை திமுக - அதிமுக நேரடியாக களம் காணும் தொகுதிகள் எவை?

01:19 PM Mar 20, 2024 IST | Web Editor
Advertisement

மக்களவைத் தேர்தலில் தற்போதைய நிலவரப்படி திமுக - அதிமுக நேரடியாக களம் காணும் தொகுதிகள் எவை என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Advertisement

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கவுள்ளது. இன்று (மார்ச் 20) முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது.  இதனால் கூட்டணி, தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய அரசியல் கட்சிகள் தீவிரமாக பணிபுரிந்து வருகின்றன.

அந்த வகையில் தமிழ்நாட்டில் திமுக ஏற்கனவே கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பதை உறுதி செய்துவிட்டதை தொடர்ந்து, கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதி குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, காஞ்சிபுரம் (தனி), கோவை, தூத்துக்குடி உள்பட 21 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

இதேபோல அதிமுகவும் கூட்டணி இறுதி செய்துள்ளது. அதன்படி அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவுக்கு 5 தொகுதிகளும் , எஸ்டிபிஐ கட்சிக்கு 1தொகுதியும், புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 16 பேர் கொண்ட முதற்கட்ட அதிமுக வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார். மீதமுள்ள வேட்பாளர்களின் பட்டியலை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தற்போதைய நிலவரப்படி திமுக - அதிமுக நேரடியாக களம் காணும் இடங்கள் :

வட சென்னை

தென் சென்னை

அரக்கோணம்

ஆரணி

சேலம்

ஈரோடு

தேனி

காஞ்சிபுரம் (தனி)

 

Tags :
AIADMKcandidate listDMKEdappadi palanisamyElectionElection2024MKStalin
Advertisement
Next Article