For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மக்களவைத் தேர்தல் 2024: முறைகேடுகளை தடுக்க வங்கிகளுக்கு தேர்தல் ஆணையம் கிடுக்கிப்பிடி!

07:07 PM Mar 16, 2024 IST | Web Editor
மக்களவைத் தேர்தல் 2024  முறைகேடுகளை தடுக்க வங்கிகளுக்கு தேர்தல் ஆணையம் கிடுக்கிப்பிடி
Advertisement

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அனைத்து வங்கிகளும் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் குறித்த தினசரி அறிக்கைகளை அனுப்ப வேண்டும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

இந்தியாவில் ஏழு கட்டமாக மக்களவைத் தேர்தல் நடக்க உள்ளது. மக்களவைத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் இன்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் குறித்த முக்கிய விவரங்களை பகிர்ந்துள்ளார். ஏப்ரல் 19-ம் தேதி முதல் 7 கட்டமாக தேர்தல் நடக்க உள்ள நிலையில் தமிழ்நாட்டிற்கு ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும்.

வாக்குப்பதிவு முடிந்த பிறகு ஜூன் 4-ம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், இரண்டு புதிய தேர்தல் ஆணையர்களான ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகியோருடன் டெல்லியில் மக்களவைத் தேர்தல் அட்டவணையை வெளியிட்டார். 

மக்களவை தேர்தலை முன்னிட்டு வங்கிகள் தினசரி தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அளிக்க வேண்டும் எனவும், அந்த அறிக்கைகள் மூலம் ஒவ்வொரு நாளும் மேற்கொள்ளப்படும் சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனை பற்றி விவரம் தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்கப்படும் எனவும் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். பண பலத்தின் தாக்கத்தை தடுக்க, நியாயமான தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், "வெவ்வேறு மாநிலங்களில் வித்தியாசமான பிரச்னைகள் இருப்பதை நாங்கள் அறிவோம். அளவுக்கு அதிகமாகப் பணப் புழக்கம் நடைபெறகிறதா என்பதை NPCI, GST போன்ற ஏஜென்சிகள் சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகளைக் கண்காணிக்கும். மதுபானம், பணம், இலவசங்கள், போதைப்பொருள் ஆகியவற்றின் விநியோகத்தை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சட்டவிரோதமாக இலவசங்களை  விநியோகம், சட்டவிரோத ஆன்லைன் பணப் பரிவர்த்தனை போன்ற குற்றங்கள் நடைபெறுவதைத் தடுக்க தீவிரமாகக் கண்காணிக்கப்படும். வங்கி வாகனங்களில் மாலைக்குப் பிறகு பணம் எடுத்துச் செல்லக்கூடாது. நடைபெறவுள்ள தேர்தல் நம் அனைவருக்கும் கிடைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பு என்ற அவர், உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை அதிகரிக்கும் வகையில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் உறுதியாக இருக்கிறது” என தெரிவித்துள்ளார். 

Tags :
Advertisement