Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மக்களவைத் தேர்தல் 2024: திமுக போட்டியிடும் தொகுதிகள்!

01:23 PM Mar 18, 2024 IST | Web Editor
Advertisement

மக்களவைத் தேர்தலில் திமுக போட்டியிடும் 21 தொகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Advertisement

திமுக கூட்டணியில் காங்கிரஸ்,  மதிமுக ஆகிய கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இன்று அறிவிக்கப்பட்டன.

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.  நாளை மறுநாள் முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது.  இதனால் கூட்டணி, தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய அரசியல் கட்சிகள் தீவிரமாக பணிபுரிந்து வருகின்றன.

அந்த வகையில் தமிழகத்தில் திமுக படுவேகமாக உள்ளது.  ஏற்கனவே கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பதை உறுதி செய்துவிட்ட நிலையில்,  தற்போது கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதி மற்றும் திமுக சார்பில் போட்டியிடும் தொகுதிகளையும் இறுதி செய்து அதன் அறிவிப்பையும் தற்போது வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 21 நாடாளுமன்ற தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.  காங்கிரஸ் கட்சி புதுச்சேரி உள்பட 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது.  விசிகவுக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரத்தை திமுக கட்சி ஒதுக்கியுள்ளது.  இதேபொல் சிபிஐக்கு 2 தொகுதிகளும், சிபிஎம் கட்சிக்கு 2 தொகுதிகளும், மதிமுகவிற்கு ஒரு தொகுதியும், இயூமுலீக்குக்கு ராமநாதபுரம் தொகுதியையும், கொமதேக நாமக்கல் தொகுதியையும் ஒதுக்கியுள்ளது.

திமுக போட்டியிம் தொகுதிகள்:  

  1.  வடசென்னை
  2.  தென்சென்னை
  3.  மத்திய சென்னை
  4.  காஞ்சிபுரம் ( தனி)
  5.  அரக்கோணம்
  6.  வேலூர்
  7.  தருமபுரி
  8.  திருவண்ணாமலை
  9.  சேலம்
  10.  கள்ளக்குறிச்சி
  11.  நீலகிரி (தனி)
  12.  பொள்ளாச்சி
  13.  கோவை
  14.  தஞ்சாவூர்
  15.  தூத்துக்குடி
  16.  தென்காசி (தனி)
  17.  ஸ்ரீபெரும்புதூர்
  18.  பெரம்பலூர்
  19.  தேனி
  20.  ஈரோடு
  21.  ஆரணி

இந்த தொகுதிகளில் யார் வேட்பாளர் என்ற அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
CongressDMKElections2024Lok Sabha Elections 2024tamil nadu
Advertisement
Next Article