For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழ்நாட்டில் 7 தொகுதிகளில் டெபாசிட்டை பறிகொடுத்த அதிமுக! 9 தொகுதிகளில் 3வது இடம்!

07:57 AM Jun 05, 2024 IST | Web Editor
தமிழ்நாட்டில் 7 தொகுதிகளில் டெபாசிட்டை பறிகொடுத்த அதிமுக  9 தொகுதிகளில் 3வது இடம்
Advertisement

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் 32 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 7 தொகுதிகளில்  டெபாசிட் இழந்துள்ளது.  மேலும், 

Advertisement

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன.  இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும்,  காங்கிரஸ்,  திமுக,  சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் INDIA கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.  பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்றது .  INDIA கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை . தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ள 40 தொகுதிகளிலும் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ்,  விடுதலை சிறுத்தைகள்,  மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,  இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் வெற்றி வாகை சூடியுள்ளன.

இதையும் படியுங்கள் : தேர்தல் முடிவு தொடர்பாக இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை; டெல்லி செல்லும் மு.க. ஸ்டாலின்!

இதைபோல,  தமிழ்நாட்டில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக பின்னடைவு பெற்றுள்ளது.  குறிப்பாக, அதிமுக தமிழ்நாட்டில் போட்டியிட்ட 32 தொகுதிகளில் 7 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது.

அதிமுக டெபாசிட் இழந்த தொகுதிகள்

  1.  தென்சென்னை
  2.  கன்னியாகுமரி
  3.  தூத்துக்குடி
  4.  நெல்லை
  5.  வேலூர்
  6.  தேனி
  7.  புதுச்சேரி

மேலும்,  ஒன்பது தொகுதிகளில் மூன்றாமிடத்திற்கும்,  2 தொகுதிகளில் 2-வது இடத்திற்கும் தள்ளப்பட்டது.

அதிமுக 3-வது இடத்திற்கு தள்ளப்பட்ட தொகுதிகள்

  1. மதுரை
  2. தென்சென்னை
  3. தேனி
  4. ராமநாதபுரம்
  5. வேலூர்
  6.  நெல்லை
  7. நீலகிரி
  8.  தருமபுரி
  9.  கோவை

அதிமுக 4-வது இடத்திற்கு தள்ளப்பட்ட தொகுதிகள்

  1.  கன்னியாகுமரி
  2. புதுச்சேரி
Tags :
Advertisement