Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மக்களவை தேர்தல் 2024 - அதிமுக தலைமையிலான கூட்டணி இன்று இறுதியாகிறது!

07:16 AM Mar 20, 2024 IST | Web Editor
Advertisement

மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து இன்று காலை 10 மணிக்கு இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளதாக அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.

Advertisement

மக்களவை தேர்தல் தேதி கடந்த மார்ச் 16 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. இதனால் கூட்டணி, தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

இதையும் படியுங்கள் : 21 தொகுதிகளில் போட்டியிடும் திமுக - இன்று வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

இந்நிலையில், மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து இன்று காலை 10 மணிக்கு இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளதாக அதிமுக தலைமை தெரிவித்துள்ளது. அண்மையில் திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தங்களது கூட்டணிகளை உறுதிப்படுத்தி தொகுதி பங்கீடு இறுதி செய்து வருகின்றன.  வேட்புமனு தாக்கல் இன்று ( மார்ச் - 20 ) முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், கூட்டணி குறித்து அதிமுக இன்று காலை 10 மணிக்கு இறுதி முடிவு எடுக்கவுள்ளதாக அக்கட்சியின் தலைமை தெரிவித்துள்ளது.

அதிமுகவுடன் ஏற்கனவே கூட்டணியில் இருக்கக்கூடிய புரட்சி பாரதம், புதிய தமிழகம், எஸ்டிபிஐ ஆகிய கட்சிகளின் தலைவர்கள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேற்று நேரில் சந்தித்தனர்.

முன்னதாக, மார்ச் 18 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்காக தயாரிக்கப்பட்ட அதிமுகவின் தேர்தல் அறிக்கையை, பசுமைவழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு  நேரில் சென்று அக்கட்சியை சேர்ந்த தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஒப்படைத்தது.  இந்த குழுவில், அதிமுக துணை பொதுச்செயலாளர் நத்தம் விஸ்வநாதன்,  அமைப்பு செயலாளர் செம்மலை,  முன்னாள் அமைச்சர் பொன்னையன், ஜெயக்குமார்,  பொள்ளாச்சி ஜெயராமன்,  ஆர் பி உதயகுமார்,  வளர்மதி,  வைகைச் செல்வன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

Tags :
ADMKElection2024electioncommisionEPSLokSabhaElections2024ParliamentElection2024TamilNadu
Advertisement
Next Article