Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஜம்மு-காஷ்மீரில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு #LLC கிரிக்கெட் போட்டி!

02:16 PM Aug 28, 2024 IST | Web Editor
Advertisement

ஜம்மு காஷ்மீரில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச விளையாட்டு வீரர்களின் கிரிக்கெட் போட்டி நடைபெறவிருக்கிறது.

Advertisement

ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீ நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள பக்‌ஷி மைதானத்தில் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் இறுதிப் போட்டி நடைபெறவிருக்கிறது. செப். 20-ம் தேதி எல்எல்சி (லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்) கிரிக்கெட் போட்டி பார்கட்டுல்லாஹ் கான் மைதானத்தில் தொடங்குகிறது. ஜம்மு காஷ்மீரில் சரியாக 38 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன. சுமார் 200க்கும் அதிகமான வீரர்கள் கலந்துகொள்ளவிருக்கின்றனர். ஜோத்பூர், சூரத், ஜம்மு, ஸ்ரீ நகர் ஆகிய 4 முக்கிய நகரங்களில் இந்தப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

கடைசியாக ஸ்ரீ நகரில் 1986-ம் ஆண்டு சர்வதேச ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவுடன் மோதிய ஆஸ்திரேலிய 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் மொத்தம் 25 ஆட்டங்கள் நடைபெறும். 6 அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டிகளில் புள்ளி அடிப்படையில் முதலில் வரும் 2 அணிகள் இறுதிப் போட்டியில் அக்.16-ம் தேதி ஸ்ரீ நகரில் விளையாட உள்ளன. ஜோத்பூரில் செப்.20-ம் தேதி இந்தப் போட்டிகள் துவங்குகின்றன. ஜம்மு காஷ்மீர் மக்கள் போட்டியை நேரடியாக பார்க்க ஆவலுடன் இருக்கிறார்கள்.

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டின் இணை நிறுவனர் ராமன் ரஹேஜா, ”லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டினை அடுத்த சீசனும் வந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதிலும் காஷ்மீரில் விளையாடுவது மிகவும் ஆர்வமாக இருக்கிறது. கிட்டதட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு காஷ்மீர் மக்கள் நேரடியாக கிரிக்கெட் போட்டியை அவர்கள் மண்ணில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் இது கிரிக்கெட் வீரர்களுக்கு காஷ்மீரின் அழகையும் அந்த மக்களின் அன்பையும் விருந்தோம்பலையும் அனுபவிக்கவிருக்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.

கடந்த சீசனில் சுரேஷ் ரெய்னா, ஆரோன் பின்ச், மார்டின் கப்டில், கௌதம் கம்பீர், கிறிஸ் கெயில், ஆசிம் அம்லா, ராஸ் டெய்லர் என 110 லெஜண்டரி கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றார்கள். இந்த சீசனுக்கான ஏலம் நாளை (ஆக.29) டெல்லியில் நடைபெறவுள்ளன.

Tags :
CricketjammuKashmirLegends League Cricket ..News7Tamilnews7TamilUpdatesT20
Advertisement
Next Article