அரசு கூட்டுறவு கொள்முதல் நிலையத்தில் ஊழியர்களின் அலட்சியம்? - பல ஆயிரம் லிட்டர் பால் வீணடிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு!
அரசு கூட்டுறவு பால் குளிரூட்டும் கொள்முதல் நிலையத்தில் ஊழியர்களின் அலட்சியத்தால் பல ஆயிரம் லிட்டர் பால், வீணடிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே
அரசு கூட்டுறவு பால் குளிரூட்டும் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு, உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் உத்திரமேரூர்
சுற்றுப்புற கிராம பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் இருந்து பால் கொள்முதல்
செய்து பால் குளிரூட்டப்பட்டு வாகனங்கள் மூலம் அரசுக்கு அனுப்பி
வைக்கப்படுகிறது.
இதையும் படியுங்கள் : IPL 2024 : 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்!
இந்நிலையில், இந்த கூட்டுறவு பால் குளிரூட்டும் நிலையத்தில் குளிரூட்டும் சாதனங்களை ஊழியர்கள் முறையாக பராமரிக்காதால் பல ஆயிரம் லிட்டர் பால் கெட்டுப் போனதாக கூறப்படுகிறது. பின்னர், கெட்டுப்போன பால்களை சில வாகனங்களில் ஏற்றி ஊழியர்கள் அனுப்பி வைத்து வீணடித்ததாக சொல்லப்படுகிறது.
அதைத்தொடர்ந்து, குளிரூட்டும் சாதனங்களை அங்கிருந்த ஊழியர்கள் பைப் ஓஸ் மூலம்
தண்ணீர் பீச்சி அடித்து சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர். பால் கெட்டுப்போனது முன்கூடியே தெரிந்ததால், பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படவில்லை.