Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நேபாளம்., இலங்கை போன்று தமிழ்நாட்டிலும் ஆட்சி மாற்றம்..? - அன்புமணி ராமதாஸ்!

நேபாளம், இலங்கை போல தமிழ் நாட்டிலும் இளைஞர்களால் ஆட்சி மாற்றம் நிகழும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
09:28 PM Sep 19, 2025 IST | Web Editor
நேபாளம், இலங்கை போல தமிழ் நாட்டிலும் இளைஞர்களால் ஆட்சி மாற்றம் நிகழும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Advertisement

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ”உரிமை மீட்க தலைமுறை காக்க” என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும்  நடைபயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் அவர் இன்று மயிலாடுதுறையில் நடை பயணம் சென்றார். அப்போது பேசிய அவர்,

Advertisement

” விவசாயிகளின் முதுகெலும்பை அன்றாடம் ஸ்டாலின் உடைத்துக் கொண்டு இருக்கிறார்.  வருகிற சட்டமன்றத் தேர்தலில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மோட்டார் சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக டெபாசிட் இழக்க வேண்டும்.

நேபாளத்தில் இளைஞர்களால் ஒரே நாளில் ஆட்சி மாற்றம் நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்று இலங்கையிலும் ஆட்சி மாற்றம் நடந்தது. அதுபோன்று அமைதியான முறையில் தமிழ்நாட்டிலும் ஆட்சி மாற்றம் இளைஞர்களால் நிகழும். நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு 60 ரூபாய் வரை லஞ்சம் கேட்கிறார்கள். ஒரு குவிண்டாலுக்கு 2500 ரூபாய் விலை நிர்ணயம் அரசு செய்துள்ளது. ஆனால் விவசாயிக்கு ஒரு குவிண்டால் உற்பத்தி செய்ய 2450 ரூபாய் செலவாகிறது. ரூபாய் 275 வரை விவசாயிகளிடம் கொள்ளையடிக்கபடுகிறது. கர்நாடகா அரசு பாசன திட்டத்திற்கு 70,000 கோடி ரூபாய் ஒக்கீடு செய்துள்ளது. ஆனால் திமுக அரசு எந்த பாசன திட்டத்தையும் அறிமுகப்படுத்தவில்லை.

கொள்ளிடம் என்பது தமிழ்நாட்டின் முக்கியமான ஆறு. ஆனால் தற்போது கொள்ளிடத்தில் உப்பு தண்ணீர் வருகிறது. 70 ஆண்டுகளுக்கு முன்பு தடுப்பணை கட்டியிருந்தால் இதுபோன்று உப்பு நீர் வந்து இருக்காது என தெரிவித்தார். மணல் கொள்ளையில் ஈடுபட முடியாது என்பதற்காகவே தடுப்பணை கட்ட திமுக அரசு மறுக்கிறது.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இல்லை என தமிழக முதல்வர் கூறுவது அயோக்கியத்தனம். 90 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் கடைசியாக கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. தேர்தலில் வீடு வீடாக எவ்வளவு காசு கொடுக்க  கணக்கெடுத்து வைத்துள்ளீர்களே. அதுபோன்று சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என தெரிவித்தார். சமூக நீதி துரோகி ஸ்டாலின்” என குற்றம் சாட்டினார்.

Tags :
AnbumaniRamadossDMKlatestNewsPMKTNnews
Advertisement
Next Article