For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இணையத்தில் கவனம் பெறும் #LIK மேக்கிங் வீடியோ!

09:57 PM Sep 18, 2024 IST | Web Editor
இணையத்தில் கவனம் பெறும்  lik மேக்கிங் வீடியோ
Advertisement

'லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி' திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது.

Advertisement

'போடா போடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இதனைத் தொடர்ந்து நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய திரைப்படங்களை இயக்கினார். இதையடுத்து, தற்போது எல்.ஐ.கே (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி) என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்த திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், கதாநாயகியாக கிருத்தி ஷெட்டி நடித்துள்ளார். எஸ்.ஜே சூர்யா இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அனிருத் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ளது.

சமீபத்தில் இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக், கிளிம்ஸ் வீடியோ வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில், விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை முன்னிட்டு 'லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி' திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு தி ரூட், செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ வாழ்த்து தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement