“நாற்பதும் நமதே என சொல்வதை விட, 400-ம் நமதே என சொல்வோம்” - அமைச்சர் அன்பில் மகேஸ்
09:54 PM Mar 03, 2024 IST
|
Web Editor
ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சட்டத்தை கொண்டு வந்தவர் அம்பேத்கர். பல்வேறு சட்டங்களை அம்பேத்கர் கொண்டு வந்தாலும் அதனை ஒடுக்க நினைப்பது மத்திய அரசு. இதுவரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு திருத்தம் செய்துள்ளது மத்திய அரசு. ஐடியை வைத்து தொடர்ந்து மிரட்டி வருகிறார்கள். வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாற்பதும் நமதே என கூறுவதை விட 400-ம் நமதே என சொல்வோம். முதலமைச்சரின் கரங்களை வலுப்படுத்தும் கூட்டமாக இந்த கூட்டம் உள்ளது. இந்த மாநாட்டில் நிறைவேற்றப்படும் 22 தீர்மானங்கள் நாட்டிற்கு தேவையான ஒன்று”
Advertisement
நாடாளுமன்ற தேர்தலில் நாற்பதும் நமதே என கூறுவதை விட 400-ம் நமதே என சொல்வோம் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
Advertisement
நாமக்கல் மாவட்டம் பொம்மைகுட்டைமேட்டில் தமிழ் புலிகள் கட்சியின் மாநில உரிமை மீட்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது :
“மத்திய அரசு மூலம் மாநில உரிமைகள் கிடைக்கவில்லை. சமத்துவ உரிமை கிடைக்கவில்லை. ஆதிக்க சக்தியான மத்திய அரசுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு பதிலடி கொடுக்கும். மாநில உரிமை மாநாடு என்பது ஒட்டுமொத்த மக்களின் மாநாடு. அண்ணல் அம்பேத்கரின் வழியில் வந்தவர்கள் நாங்கள். 18 மணி நேரம் உழைத்தவர் அம்பேத்கர்.
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.
Next Article