For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"தீண்டாமை இல்லாத சமத்துவ நாடாக இந்தியாவை உருவாக்குவோம்" - எடப்பாடி பழனிசாமி X தளத்தில் பதிவு !

தீண்டாமை துளியும் இல்லாத சமத்துவ நாடாக இந்தியாவை கட்டமைக்க உறுதியேற்போம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
01:27 PM Jan 30, 2025 IST | Web Editor
 தீண்டாமை இல்லாத சமத்துவ நாடாக இந்தியாவை உருவாக்குவோம்    எடப்பாடி பழனிசாமி x தளத்தில் பதிவு
Advertisement

மகாத்மா காந்தி, இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைப்பதில் பெரும்பங்காற்றியவர் என்பது நாம் அனைவரும் அரிந்த ஒன்று. அதுவும், ஆயுதம் ஏந்தாமல் அகிம்சை வழியலும் அன்பு வழியிலும் சுதந்திரம் வாங்கிக்கொடுத்தவர். 1869ஆம் ஆண்டு பிறந்த இவர் 1948 ஆம் ஆண்டு, ஜனவரி 30 ஆம் நாள் மாலை டில்லி பிர்லா மாளிகை தோட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30ம் தேதி தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

Advertisement

அந்த வகையில் இன்று காந்தியடிகளின் 78வது நினைவு நாள் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் காந்தியடிகளின் நினைவு நாளை போற்றும் வகையில் சென்னை, எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி திருவுருவ சிலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், " அறவழியில் ஆங்கிலேயரை வென்ற அமைதிப் புரட்சியாளர், சத்திய வழியை மானுட உலகத்திற்கு காட்டிய வழிகாட்டி, நம் இந்தியத் திருநாட்டின் கொள்கைத் தந்தை அண்ணல் காந்தியடிகளின் நினைவுநாளில், மகாத்மாவின் பெரும் புகழைப் போற்றி வணங்குகிறேன்.

நாட்டின் சமத்துவத்திற்காக தன்னையே தியாகம் செய்த அண்ணல் காந்தியடிகளின் நினைவுநாளில், நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த உத்தமர்கள் அனைவரையும் நினைவுகூர்வதுடன், தீண்டாமை துளியும் இல்லாத சமத்துவ நாடாக இந்தியாவைக் கட்டமைக்க உறுதியேற்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags :
Advertisement