மீண்டும் கல்லூரிக்கு போகலாம்... - கோடை விடுமுறைக்கு பின்னர் கல்லூரிகள் திறப்பு எப்போது? - உயர்கல்வித்துறை அறிவிப்பு!
2024-25 கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வுகள் மாரச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெற்றது. அதன்படி 10ம் வகுப்பு , 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நிறைவடைந்தது. உயர்கல்வி போலவே தொடக்கப் பள்ளிகளான 1 முதல் 3 ஆம் வகுப்புகளுக்கு ஏப்.15 முதல் 21 ஆம் தேதி வரை முழு ஆண்டு தேர்வு நடைபெற்றது. மேலும் 4 ஆம் வகுப்பு மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கு ஏப்.9 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை தேர்வு நடைபெற்றது.
அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுகள் நிறைவடைந்த நிலையில் தமிழ்நாட்டில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஏப்.22 ஆம் தேதியில் இருந்தும், 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்.25 ஆம் தேதியில் இருந்தும் கோடை விடுமுறை தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
ஒருமாத கால விடுமுறைக்கு பின்னர் 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள் 02.06.2025 (திங்கள் கிழமை) அன்று திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதேபோல போலவே அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளுக்கு செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்ற நிலையில் அவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோடை விடுமுறைக்குப் பிறகு கல்லூரிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து கல்லூரிக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி 2025-2026ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகள் ஜூன் 16-ஆம் தேதி (திங்கள் கிழமை) திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது