For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"தமிழ்நாட்டிற்காக ஒன்றுபட்டு போராடுவோம்" - தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளை முன்னிட்டு திமுக தொண்டர்களுக்கு வீடியோ வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார்.
08:15 AM Feb 28, 2025 IST | Web Editor
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளை முன்னிட்டு திமுக தொண்டர்களுக்கு வீடியோ வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார்.
 தமிழ்நாட்டிற்காக ஒன்றுபட்டு போராடுவோம்    தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கோரிக்கை
Advertisement

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72 வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. அவரின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக தொண்டர்கள் பொதுக்கூட்டங்களும், நலத்திட்ட உதவிகளும் செய்து வருகின்றனர். இந்த நிலையில், பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisement

அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது,

"பொதுவாக எனது நாள் பிறந்தநாளை பெரிய அளவில் ஆடம்பரமாக கொண்டாடுவதில்லை. ஆனால் கட்சி தொண்டர்கள் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது, கட்சியின் சாதனைகள் மற்றும் கொள்கைகளை எடுத்துச் சொல்கிற பொதுக்கூட்டங்களை நடத்துவது என செயல்படுவார்கள். இந்த முறை எனது பிறந்தநாள் வேண்டுகோளாக கட்சி தொண்டர்களுக்கு ஒரு கோரிக்கையை முன் வைக்கிறேன். தமிழ்நாடு இன்று தன்னுடைய உயிர் பிரச்னையான மொழிப்போரையும், உரிமை பிரச்னையான தொகுதி மறுசீரமைப்பையும் எதிர்கொண்டுள்ளது.

இதனுடைய உண்மையான நோக்கத்தை நீங்கள் மக்களிடம் கொண்டு செல்ல கேட்டுக்கொள்கிறேன். தொகுதி மறுசீரமைப்பு என்பது நமது மாநிலத்தின் சுயமரியாதை, சமூக நீதி, சமூக நல திட்டங்களை பெரிதும் பாதிக்கும். இதை நீங்கள் மக்களிடன் கொண்டு செல்ல வேண்டும். ஒவ்வொருவரும் மாநிலம் காக்க எழுந்து நிற்க வேண்டும். இந்தியாவுக்கே வழிகாட்டியாக நாம் போராட்டத்தை தொடங்க வேண்டும்.

கர்நாடகாக, பஞ்சாப், தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இருந்து நமக்கான ஆதரவு குரல் வந்துள்ளது. இதனை பார்த்த மத்திய அரசு இந்தியை திணிக்கவில்லை என்று கூறி அதற்கான முன்னெடுப்புகளை எடுத்துக்கொண்டு உள்ளது. மும்மொழி கொள்கைகைய ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால் நமக்கான நிதியை இன்னும் தரவில்லை. அதேபோல், தமிழ்நாட்டிற்கான தொகுதிகளை குறைக்க மாட்டோம் என்று கூறுகிறார்களே தவிர, மற்ற மாநிலங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மாட்டோம் என்று தெரிவிப்பதில்லை.

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை பிரிக்க வேண்டான் என்றும் நாட்டின் வளர்ச்சிக்காக மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தென் மாநிலங்களை கண்டிக்க வேண்டான் என்றும் நாம் கேட்கிறோம். அவ்வாறு நடந்தால் அதனை தமிழ்நாடும், திமுகவும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். நாம் ஒரு உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் நலனையும், எதிர்காலத்தையும் யாருக்காகவும், எதற்காகவும் விட்டுத் தர மாட்டோம். தமிழ்நாட்டிற்காக ஒன்றுப்பட்டு போராடுவோம். தமிழ்நாடு போராடும்... தமிழ்நாடு வெல்லும்!"

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement