For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஹைதராபாத்தின் பெயரை ‘பாக்யநகர்’ என மாற்றுவோம்! - தெலங்கானா பாஜக மாநிலத் தலைவர் கிஷன் ரெட்டி வாக்குறுதி!

05:55 PM Nov 27, 2023 IST | Web Editor
ஹைதராபாத்தின் பெயரை ‘பாக்யநகர்’ என மாற்றுவோம்    தெலங்கானா பாஜக மாநிலத் தலைவர் கிஷன் ரெட்டி வாக்குறுதி
Advertisement

தெலங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஹைதராபாத்தின் பெயரை பாக்யநகர் என மாற்றுவோம் என அம்மாநில பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். 

Advertisement

தெலங்கானாவின் 119 பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தல் வரும் 30-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் நாளை முடியும் நிலையில்,  முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும், அரசியல் கட்சிகளின் தலைவர்களும் முழுவேகத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மோடி, அமித் ஷா, அனுராக் தாக்கூர், ஜேபி நட்டா, ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோர் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக கடந்த இரண்டு நாள்களாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், தெலங்கானாவில் பிரசாரத்தில் ஈடுபட்ட உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அம்மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் ஹைதராபாத் நகரின் பெயர் பாக்யநகர் என மாற்றப்படும் என நேற்று முன்தினம் (25.11.2023) பேசியிருந்தார். ஏற்கனவே அசாம் முதல்வர் ஹிமண்டா பிஸ்மா சர்மா இதே கருத்தை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தெலங்கானா மாநில பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான கிஷன் ரெட்டி தேர்தல் பிரசாரத்தின் போது, மெட்ராஸின் பெயர் சென்னை என்றும், கல்கத்தாவை கொல்கத்தா என்றும், பாம்பே மும்பை என்றும், ராஜ்பாத்தை கர்தவ்யா பாதை என்றும் மாற்றினோம். அப்படியானால், ஹைதராபாத் பெயரை ஏன் மாற்றக்கூடாது? ஹைதர் யார்? பாக்யநகர் என்பது இதன் பழைய பெயர், நிஜாம் ஆட்சியில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் பாக்யநகர் என்று பெயரிடுவோம் இவ்வாறு கிஷன் ரெட்டி கூறினார்.

உத்தரபிரதேசத்தில், அலகாபாத் போன்ற நகரங்களை பிரயாக்ராஜ் என்றும், பைசாபாத் அயோத்தி என்றும் யோகியின் அரசாங்கம் பெயர் மாற்றியுள்ளது. மேலும், அலிகாரை ஹரிகர் என்றும், மைன்புரியை மாயன் நகர் என்றும், ஃபிரோசாபாத்தை சந்திரா நகர் என்றும், மிர்சாபூரை வித்யா தாம் என்றும் மறுபெயரிடவும் பரிந்துரைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement