Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"மாமன்னன் ராஜேந்திர சோழனின் பெருமையினை போற்றிடுவோம்" - மத்திய இணையமைச்சர் எல்.முருகன்!

கங்கைகொண்ட சோழபுரம் வரும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை நாம் அனைவரும் உற்சாகத்துடன் வரவேற்போம் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
12:53 PM Jul 26, 2025 IST | Web Editor
கங்கைகொண்ட சோழபுரம் வரும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை நாம் அனைவரும் உற்சாகத்துடன் வரவேற்போம் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
Advertisement

கங்கை கொண்ட சோழபுரம் கோயிலின் ஆயிரமாவது ஆண்டு திருவிழாவில் கலந்து கொள்வதற்காக, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருவதையொட்டி, அவரை வரவேற்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,

Advertisement

"முதலாம் ராஜேந்திர சோழ மன்னனின் பிறந்தநாள் திருவிழா,

கங்கை கொண்ட சோழபுரம் கோவிலின் ஆயிரமாவது ஆண்டு விழா மற்றும் ஆடி திருவாதிரை திருவிழா ஆகியவற்றிற்கு வருகை தரும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்போம்!

வடதிசை கங்கையும், தென்திசை ஈழமும், கிழக்கே கடாரமும் வென்றெடுத்த மாமன்னன் ராஜேந்திர சோழன். ‘‘நித்தில நெடுங்கடல் உத்திரலாடமும் வெறிமலர் தீர்த்தத்து எறிபுனல் கங்கையும்’’ என விவரித்து, கங்கை நீருடன் சோழர் படை தாயகம் திரும்பியதை எடுத்துக் கூறுகிறது ராஜேந்திர சோழனின் மெய்கீர்த்தி சாசனம்.

தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, கப்பற்படை கொண்டு படைத்திறனில் முன்னோடி, சென்ற இடமெல்லாம் வெற்றி வாகை சூடிய சிங்கம், பார்போற்றும் கட்டிடக் கலையில் உலகம் வியந்த சிற்ப கலைஞன், நீதிநெறி தவறாமல் ஆட்சி நடத்திய மாமன்னன் என போற்றப்படுபவர் ராஜேந்திர சோழன்.

ராஜேந்திர சோழன் ஆட்சிக் காலத்தில், தமிழகத்தின் கீர்த்தியும் ஆளுமையும் தென்கிழக்கு ஆசியா வரை எதிரொலித்தது. நமது வணிகம், சமயம், கட்டிடக்கலை தென்கிழக்கு ஆசியா முழுமையிலும் பரவி சிறப்புற்று விளங்கி இருந்தது. போற்றுதலுக்குரிய சோழப் பேரரசன், மாமன்னன் ராஜேந்திர சோழனின் நினைவை போற்றும் வகையில் அவரது பிறந்தநாள் ஆடி திருவாதிரை திருவிழாவையொட்டி, சோழர்களின் தலைநகராக விளங்கிய கங்கைகொண்ட சோழபுரத்தில் ஜூலை 27-ஆம் தேதி நடைபெறும் விழாவில் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

இது, தமிழர்கள் ஒவ்வொருவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் மொழியின் சிறப்பையும், தமிழகத்தின் கலாச்சார பெருமையையும் உலகெங்கும் ஓங்கி ஒலித்து வரும் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் இந்த விழாவில் பங்கேற்று நமக்கெல்லாம் பெருமை சேர்ப்பது சிறப்பான ஒன்றாகும்.

கங்கைகொண்ட சோழபுரம் வரும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை நாம் அனைவரும் உற்சாகத்துடன் வரவேற்போம்...!
கங்கைகொண்ட சோழபுரத்தில் சந்திப்போம்..!
மாமன்னன் ராஜேந்திர சோழனின் பெருமையினை போற்றிடுவோம்...! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
L MuruganmodiPMPMModiRajendra CholaTamilNadu
Advertisement
Next Article