"ஓரணியில் தமிழ்நாடு வெல்லட்டும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை மேற்கொள்ளும் விதமாக 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பிரசார இயக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் 'ஓரணியில் தமிழ்நாடு' இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்தார். இந்த நிகழ்வின் போது மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனும் உடன் இருந்தார்.
இதேபோல மாவட்டங்களில் அமைசர்கள், கட்சி நிர்வாகிகள் திமுக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி க்களை நேரில் சந்தித்து பிரசாரத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க, சாதி, மதம், அரசியல் கடந்து ஓரணியில் தமிழ்நாடு வெல்லட்டும்!
தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காக்க, சாதி - மதம் - அரசியல் கடந்து #ஓரணியில்_தமிழ்நாடு வெல்லட்டும்!
இதற்காக அடுத்த 45 நாட்கள், கழக மாவட்டச் செயலாளர்கள் - சட்டமன்ற உறுப்பினர்கள் - நாடாளுமன்ற உறுப்பினர்கள் - மூத்த முன்னோடிகள் என அனைவரும் பரப்புரையில் ஈடுபட்டு, தமிழ்நாட்டிலுள்ள… pic.twitter.com/qzQ3egmuFD
— M.K.Stalin (@mkstalin) July 3, 2025
இதற்காக அடுத்த 45 நாட்கள், கழக மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மூத்த முன்னோடிகள் என அனைவரும் பரப்புரையில் ஈடுபட்டு, தமிழ்நாட்டிலுள்ள அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும்! இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.