For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

5 கோடி பார்வைகளை கடந்த ’லியோ’ படத்தின் ப்ரொமோ வீடியோ; ரசிகர்கள் உற்சாகம்

10:49 AM Mar 17, 2023 IST | Web Editor
5 கோடி பார்வைகளை கடந்த ’லியோ’ படத்தின் ப்ரொமோ வீடியோ  ரசிகர்கள் உற்சாகம்
Advertisement

லியோ ப்ரொமோ வீடியோ தற்போது 5 கோடி பார்வையாளர்களைக் கடந்துள்ளதால் விஜை ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Advertisement

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விக்ரம்-2 படத்தை தொடர்ந்து தற்போது லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் விஜய், த்ரிஷா, சஞ்ஜய் தத், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் மூலம் நடிகர் விஜய்யுடன் லோகேஷ் 2வது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளார்.

இந்த படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடந்து வருகின்றது. படப்பிடிப்பு தளத்தில் இருந்து அவ்வப்போது வெளியாகும் புகைப்படங்களால் ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் காத்துள்ளனர். மேலும் லியோ படத்தின் ப்ர்ஸ்ட் ப்ரொமோ வீடியோ  ப்ளடி ஸ்வீட் என்று பெயர் அறிவிக்கப்பட்ட உடனேயே இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது.

அதனை அதிகப்படுத்தும் விதமாக லியோ படத்தின் ப்ரோமோ வெளியாகியும் பட்டையை கிளப்பியது. ப்ரோமோவில் விஜய் ஒரு சாக்லேட் ஃபேக்டரி வைத்திருப்பது போலவும், அவரைத் தேடி மிகப்பெரிய கேங் ஒன்று வருவது போலவும் காட்சிகள் இருந்தன.

இந்நிலையில், லியோ ப்ரொமோ வீடியோ தற்போது 5 கோடி பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இதனால் விஜை ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
Advertisement