For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சட்டப்பேரவைத் தேர்தல் : மிசோரம், சத்தீஸ்கரில் வாக்குப்பதிவு நிறைவு!

07:10 PM Nov 07, 2023 IST | Web Editor
சட்டப்பேரவைத் தேர்தல்   மிசோரம்  சத்தீஸ்கரில் வாக்குப்பதிவு நிறைவு
Advertisement

மிசோரம் மற்றும் சத்தீஸ்கரில் த்தில் ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவடைந்துள்ளன.

Advertisement

90 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் நவம்பர் 7, 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. 90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று  நடைபெற்றது. அதேபோன்று, மிசோரம் மாநில சட்டபேரவையும் தேர்தலுக்கான வாக்குப்பதிவும் இன்று நடைபெற்றது.

சத்தீஸ்கரில் முதற்கட்டமாக 20 தொகுதிகளுக்கு வாக்குப்பதி இன்று தொடங்கி நடைபெற்றது. நாராயண்பூர், தண்டேவாடா, பிஜபூர், கோன்டா, கேன்கர் உள்ளிட்ட 10 தொகுதிகளில் இன்று காலை 7 முதல் பிற்பகல் 3 மணி வரையும், இதர 10 தொகுதிகளில் காலை 7 முதல் மாலை 5 மணி வரையும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் சத்தீஸ்கர் மாநில முதற்கட்டத் தேர்தலில் 70.87% வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்குப்பதிவுக்கு இடையே சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் நக்சல்கள் இன்று தாக்குதல் நடத்தினர். சிறப்பு படையினருக்கும் நக்சல்களுக்கும் இடையே நடந்த தாக்குதலில் வீரர்கள் 3 பேர் காயமடைந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதுபோல, மிஸோரமின் 40 பேரவைத் தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெற்றது. மிஸோரத்திலும் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் 75.68% வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement