For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Lebanon-ல் பேஜர்களை தொடர்ந்து வாக்கி டாக்கி கருவிகள் வெடிப்பு - 3 பேர் உயிரிழப்பு!

07:03 AM Sep 19, 2024 IST | Web Editor
 lebanon ல் பேஜர்களை தொடர்ந்து வாக்கி டாக்கி கருவிகள் வெடிப்பு   3 பேர் உயிரிழப்பு
Advertisement

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் வாக்கி டாக்கிகள் அடுத்தடுத்து வெடித்ததில் 3 பேர் உயிரிழந்தனர். 

Advertisement

லெபனான் (Lebanon) தெற்கு பகுதிகளிலும் தலைநகர் பெய்ரூட்டில் (Beirut) பல்வேறு இடங்களில் ஹிஸ்புல்லாவிரின் (Hezbollah) தகவல் பரிமாற்ற கருவிகளான வாக்கி டாக்கி கருவிகள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறியதில் 03 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த வாக்கி டாக்கி தாக்குதல் நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த தகவல் பரிமாற்ற கருவிகளான பேஜர் கருவிகள் நேற்றுமுன் (17) தினம் நூற்றுக்கணக்கில் அடுத்தடுத்து வெடித்ததில் 12 பேர் உயிரிழந்த நிலையில் 3000க்கும் மேற்பட்டோர் வரை படுயாகம் அடைந்தனர்.
லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள தலைநகர் பெய்ரூட்டில் அல்-ஷஹ்ரா மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் வைத்திருந்த பேஜர்கள் அடுத்தடுத்து வெடித்தன.

இந்த நிலையிலே நேற்று ஹிஸ்புல்லாவிரின் தகவல் பரிமாற்ற கருவிகளான வாக்கி டாக்கி கருவிகள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறியதில் 03 பேர் உயிரிழந்துள்ளதுடன் 15 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல்தான்காரணம் என்று ஹிஸ்புல்லா குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் சிரியாவில் வயர்லெஸ் சாதனங்களை பயன்படுத்த வேண்டாம் என அனைத்து பாதுகாப்பு முகமைகள் மற்றும் இராணுவப் படைகளுக்கு அந்நாட்டு அரசு சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது.

Tags :
Advertisement