For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

டி20 உலகக் கோப்பை - மேற்கிந்தியத் தீவுகள் வீரர் நிக்கோலஸ் பூரன் புதிய சாதனை!

09:21 PM Jun 22, 2024 IST | Web Editor
டி20 உலகக் கோப்பை   மேற்கிந்தியத் தீவுகள் வீரர் நிக்கோலஸ் பூரன் புதிய சாதனை
Advertisement

டி20 உலகக் கோப்பைத் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் நிக்கோலஸ் பூரன் புதிய சாதனை படைத்துள்ளார்.

Advertisement

டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் முதல் போட்டியில் தோல்வியைத் தழுவிய மேற்கிந்தியத் தீவுகள், அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம், அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கான போட்டியிலும் மேற்கிந்தியத் தீவுகள் தொடர்கிறது.

அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர்களான ஷாய் ஹோப் மற்றும் நிக்கோலஸ் பூரன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக விளையாடிய ஷாய் ஹோப் 82 ரன்கள் எடுத்தும், நிக்கோலஸ் பூரன் 27 ரன்கள் எடுத்தும் கடைசி வரை களத்தில் இருந்தனர்.  இந்த போட்டிக்குப் பிறகு நிக்கோலஸ் பூரன் டி20 உலகக் கோப்பைத் தொடரில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இதையும் படியுங்கள் : சூப்பர் 8 சுற்று – இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சு தேர்வு!

அதன்படி, டி20 உலகக் கோப்பைத் தொடர் ஒன்றில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் மட்டும் அவர் 17 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். இதற்கு முன்னதாக கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பைத் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் 16 சிக்ஸர்கள் விளாசியதே, டி20 உலகக் கோப்பைத் தொடர் ஒன்றில் தனிநபர் ஒருவரால் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்களாக இருந்தது. கிறிஸ் கெயிலின் இந்த சாதனையை தற்போது நிக்கோலஸ் பூரன் முறியடித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைத் தொடர் ஒன்றில் தனிநபர் ஒருவரால் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்கள்:

நிக்கோலஸ் பூரன் - 17 சிக்ஸர்கள் (2024)

கிறிஸ் கெயில் - 16 சிக்ஸர்கள் (2012)

மார்லன் சாமுவேல்ஸ் - 15 சிக்ஸர்கள் (2012)

ஷேன் வாட்சன் - 15 சிக்ஸர்கள் (2012)

Tags :
Advertisement