Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் - ஆளுநரிடம் த.வெ.க தலைவர் விஜய் வலியுறுத்தல் !

01:58 PM Dec 30, 2024 IST | Web Editor
Advertisement

சென்னை ஆளுநர் மாளிகையில் த.வெ.க தலைவர் விஜய் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதில் பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் ஞானசேகரன்(37) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்திற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனங்களை தெரிவித்தனர்.

மேலும் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் திமுக அரசை கண்டித்தும் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் த.வெ.க தலைவர் விஜய் இன்று காலை நாட்டில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்பாக தமிழக பெண்களுக்கு கடிதம் எழுதினார். மேலும் இது தொடர்பாக விஜய் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து பேசினார். அப்போது அண்ணா பல்கலை கழக சம்பவம் மட்டும் அல்லாமல் பிற விவகாரங்கள் குறித்தும் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் கோரிக்கை மனுவை அளித்துள்ளார். இச்சந்திப்பின் போது தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன் உடன் இருந்தனர்.

இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை தவெக தலைவர் விஜய் சந்தித்தது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தலைமையில் ஆளுநர் ஆர்.என். ரவியைச் சந்தித்து மனு அளித்தோம். எங்கள் மனுவில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம்.

மேலும், தமிழகம் முழுவதும் அண்மையில் பெய்த பருவமழை மற்றும் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகையை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என மனுவில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. எங்கள் கோரிக்கைகளைக் கேட்ட ஆளுநர் அவற்றைப் பரிசீலிப்பதாகக் கூறினார்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
ChennaiGovernorGovernor's HouseLawOrderRNRavitamil naduvijay
Advertisement
Next Article