லடாக் வன்முறை - காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது..!
கடந்த 2023 ஆம் ஆண்டு மத்திய அரசு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்தது. மேலும் காஷ்மீரை இரண்டாக பிரித்து லடாக் மற்றும் காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து லடாக்கிற்கு தனிமாநில அந்தஸ்து கோரியும், அரசியலமைப்பு அட்டவணையில்ன் 6 வது பிரிவில் லடாக்கை சேர்க்க கோரியும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10 ஆம் தேதி முதல் காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்ற வந்தது. இந்த நிலையில் கடந்த புதன்கிழமை நடந்த முழ அடைப்பு போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதி 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 80 பேர் காயமடைந்தனர்.
இதனால் சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார். மத்திய உள்துறை அமைச்சகமானது, இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட சோனம் வாங்சுக்கின் பேச்சுதான் காரணம் என்று அறிக்கை வெளியிட்டது. மேலும் அவரது ‘லடாக் மாணவர்கள் கல்வி மற்றும் கலாசார இயக்கம் (எஸ்இசிஎம்ஓஎல்)’ என்ற கல்வி அமைப்பின் உரிமம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது. ஆனால் வாங்சுக் அரசின் குற்றச்சாட்டுகளுக்கு இதற்கு மறுப்பு தெரிவித்தார்.
இந்த நிலையில் லேவில் வன்முறையைத் தூண்டியதாக சோனம் வாங்சுக் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
வாங்சுக் இன்று மதியம் 2.30 மணியளவில் செய்தியாளர்களைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால், அதற்கு முன்னதாகவே காவல் துறையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.