For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ம.பி.யில் இருந்து மீண்டும் மாநிலங்களவை செல்கிறார் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்!

11:19 AM Feb 14, 2024 IST | Jeni
ம பி யில் இருந்து மீண்டும் மாநிலங்களவை செல்கிறார் மத்திய இணையமைச்சர் எல் முருகன்
Advertisement

மீண்டும் மத்தியப்பிரதேசத்தில் மாநிலங்களவைக்குச் செல்கிறார் மத்திய இணையமைச்சர் எல்.முருகன். 

Advertisement

நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.  தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில்,  தேர்தலுக்கான பணிகளில் பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.  கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை,  மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்,  தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை என அனைத்து அரசியல் கட்சிகளும் வெற்றி பெறும் முனைப்பில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்திய அளவில் உள்ள முன்னணி அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.  மக்களவை,  மாநிலங்களவை என இரண்டு அவைகளிலும் உள்ள இடங்களுக்கு போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.  அண்மையில் உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி முதற்கட்ட வேட்பாளரை அறிவித்தது.

இரண்டு நாட்களுக்கு முன்னர்,  மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது.  இந்நிலையில் இன்று மற்றொரு பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.  அதன்படி, மத்தியப்பிரதேச மாநிலங்களவை பதவிக்கான வேட்பாளராக மத்திய இணையமைச்சர் எல்.முருகனை பாஜக அறிவித்துள்ளது. இதன்மூலம் 2வது முறையாக அவர் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.  அதேபோல், ஒடிசா மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : அன்று முதல் இன்று வரை... காதலர்களை கட்டிப்போட்ட பாடல்கள்!!

பாஜக மாநில தலைவராக இருந்த எல்.முருகன்,  கடந்த 2021-ம் ஆண்டு மத்தியப்பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினரானார்.  பின்னர் மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.  வரும் பிப்ரவரி 27-ம் தேதி 15 மாநிலங்களில் 56 மாநிலங்களவை இடங்களுக்கான தோ்தல் நடைபெற உள்ளது.  இதற்கான வேட்புமனுத்தாக்கல் நாளையுடன் (பிப்.15) நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement