For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

குவைத் தீ விபத்து | வெளிநாடுவாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை சார்பில் கண்ணீர் அஞ்சலி கூட்டம்!

01:54 PM Jun 15, 2024 IST | Web Editor
குவைத் தீ விபத்து   வெளிநாடுவாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை சார்பில் கண்ணீர் அஞ்சலி கூட்டம்
Advertisement

குவைத் தீ விபத்தில் பலியானவர்களுக்கு வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை நலச் சங்கம் சார்பில் கண்ணீர் அஞ்சலி கூட்டம் நடத்தப்பட்டது. 

Advertisement

குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கடந்த 12 ஆம் தேதி பயங்கர தீ விபத்து நிகழ்ந்தது.  குவைத் வரும் இந்தியர்கள் பலர் இந்த குடியிருப்பில் தங்குவார்களாம்.  அந்த வகையில் இங்கு தங்கியிருந்த 7 தமிழர்கள் உள்பட 50 பேர் பலியாகிவிட்டனர்.

கேரளாவை சேர்ந்த 24 பேர்,  டெல்லி உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 15 பேரும் இறந்தனர். இந்த நிலையில் தீவிபத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 31 பேரின் உடல்கள் இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானம் மூலம் கொச்சிக்கு கொண்டு வரப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

image

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீராசாமி,  கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சின்னதுரை, சென்னை ராயபுரத்தை சேர்ந்த சிவசங்கர்,  திண்டிவனத்தை சேர்ந்த முகமது ஷெரிப், ராமநாதபுரத்தை சேர்ந்த கருப்பண்ணன் ராமு,  திருச்சியை சேர்ந்த ராஜு எபநேசன், பேராவூரணியை சேர்ந்த ரிச்சர்ட் ராய் ஆகியோர் உயிரிழந்துவிட்டனர்.

இவர்களின் உடல்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் உறவினர்கள் கதறிய காட்சி காண்போர் மனதை கலங்க செய்தது.  பின்னர் அவர்களது உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன.

இந்நிலையில்,  வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை நலச் சங்க குவைத் நிர்வாகிகள் களத்திற்கே நேரில் சென்று ஆறுதல் கூறினர்.  அதுமட்டுமின்றி இந்திய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இறந்த குடும்பத்தினர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் என மின்னஞ்சல் மூலம் வேண்டுகோள் வைத்தனர்.

மேலும் மரணித்த 45 இந்தியர்களுக்காக அஞ்சலி செலுத்துவதற்காக,  கண்ணீர் அஞ்சலி கூட்டம்  நேற்று மாலை 7 மணிக்கு குவைத் சிட்டி பாலிவுட் உணவகத்தில் நடத்தப்பட்டது.  கூட்டத்தில் தீ விபத்தில் மரணித்த 45 இந்தியர்களுக்கு நிதி உதவி அளித்த மத்திய அரசுக்கும்,  31 கேரள மக்களுக்கு நிதி உதவி அளித்த கேரள அரசுக்கும் குறிப்பாக 7 தமிழர்களுக்கு நிதி உதவி அளித்த தமிழ்நாடு அரசுக்கும் மேலும் நேரடி களத்தில் நின்று கடும் பணியாற்றிய இந்திய தூதரகத்திற்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

நிகழ்வுக்கு M.A.ஹைதர் குழுமம் நிறுவனர் முனைவர் S.M.ஹைதர் அலி
தலைமை வகித்தார். திரைப்பட இயக்குநர் அனீஸ், திருக்குறள் தூதர்
முனைவர் மு.க.அன்வர் பாட்சா, Vvtns மண்டல ஆலோசகர் ஹீலிங் ஹேண்ட்ஸ் டாக்டர் ஜேம்ஸ் பேரிடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

குவைத் தமிழக அமைப்பு பிரதிநிதிகள் தொழிலதிபர்கள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு இரங்கல் கூட்டத்தில் பேசினர். தூதரக செயலர் முத்துராமலிங்கம் நன்றியுரையுடன் கூட்டம் கன இதயத்துடன் கண்ணீருடன் கலைந்தது. இருநூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் அமைப்பினர்கள் கலந்து கொண்டனர்

நிகழ்ச்சியை நூர் முகம்மது, நபீல்காசிம், நெல்லை மரைக்காயர், இதயத்துல்லா பாதுசா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

Tags :
Advertisement