கோயில் விழாவில் 300-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர்கள் கும்மியாட்டம்!
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த கோடந்தூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீஇராஜலிங்க மூர்த்தி கோயிலில் தமிழர் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக தப்பாட்ட இசைக்கேற்ப சிறுவர், சிறுமியர் என 300-க்கும் மேற்பட்ட கும்மியாட்டக் குழுவினர் நடனமாடி அசத்தினர்
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த கோடந்தூர் பகுதியில் அமைந்துள்ள ஆயிரம்
ஆண்டு பழமையான அருள்மிகு ஸ்ரீ இராஜலிங்க மூர்த்தி கோயிலில் தமிழர்
பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக குதிரை, காளை, பசு மாடுகளுடன் பெண்கள் முளைப்பாரியை ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்துச் சென்று, சுவாமி தரிசனம் செய்து பவளக்கொடி கும்மியாட்ட குழுவினரின் 71வது அரங்கேற்ற விழா நடைபெற்றது.
இன்றைய நாகரீக உலகத்தில் பழமையான கலைகள் ஒவ்வொன்றும் அழிந்து வரும் நிலையில், பழமையான கலைகளை மீட்டெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கோடந்தூர் கிராமத்தில் பவளக்கொடி கும்மியாட்டக் குழுவினரின் அரங்கேற்ற விழா நடைபெற்றது.
கும்மியாட்டத்தில் கரூர் மட்டுமின்றி அண்டை மாவட்டத்தில் இருந்தும் 300க்-கும்மேற்பட்ட சிறுவர், சிறுமியர், பெண்கள், ஆண்கள் என தப்பாட்ட இசைக்கு ஏற்ப நடனம் ஆடி அசத்தினர். இதனை சுற்றுவட்டார பகுதியில் இருந்து வந்த ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
ரூபி.காமராஜ்