67 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த ஊர் திரும்பும் நடராஜர் சிலை!
கும்பகோணம் அருகே சிவபுரம் கோயிலில் இருந்த நடராஜர் சிலை 1957 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு கடத்திச் செல்லப்பட்டு, 1987 ஆம் ஆண்டு இந்தியா கொண்டுவரப்பட்ட சிலை, 67 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த ஊர் திரும்ப உள்ளது.
கும்பகோணம் அருகில் உள்ள சிவபுரம் சிவகுருநாத சுவாமி ஆலயத்திற்கு சொந்தமான
நடராஜர் சிலை 1957 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு கடத்திச் செல்லப்பட்டது. பல்வேறு
கட்ட போராட்டத்திற்கு பிறகு இந்த சிலை 1987 ஆம் ஆண்டு இந்தியா
கொண்டுவரப்பட்டது.
இதையும் படியுங்கள் : பயிர் நிதியுதவி வழங்க தெலங்கானா அரசுக்கு தடை! – தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!
இந்தியா கொண்டுவரப்பட்ட இந்த சிலை, சிவபுரம் சிவகுருநாத சுவாமி ஆலயத்திற்கு கொண்டு செல்லப்படவில்லை. அதனை தொடர்ந்து, சிவபுரம் கிராம மக்கள் பல ஆண்டு காலமாக கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று (நவ.27) சிலை திருவாரூர் உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்தில் இருந்து பாதுகாப்பாக கும்பகோணம் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படுகிறது. நீதிமன்ற அனுமதி பெற்று சிவகுருநாத சுவாமி ஆலயத்திற்கு இன்று மதியம் கொண்டு செல்லப்படும்.
அதனை தொடர்ந்து, 67 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த ஊர் திரும்பும் நடராஜர் சிலைக்கு வரவேற்க கிராம மக்கள் ஆர்வமாக உள்ளனர்.