For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

டிங் லிரெனை வீழ்த்தி இளம் உலக செஸ் சாம்பியனானார் குகேஷ்!

07:51 PM Dec 12, 2024 IST | Web Editor
டிங் லிரெனை வீழ்த்தி இளம் உலக செஸ் சாம்பியனானார் குகேஷ்
Advertisement

தமிழ்நாடு செஸ் வீரர் குகேஷ் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.

Advertisement

இந்தியாவின் செஸ் கிராண்ட்மாஸ்டர் குகேஷுக்கும், சீனாவின் டிங் லிரெனுக்கும் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது. மொத்தம் 14 சுற்றுகளை கொண்ட இந்த தொடரில் 3-வது மற்றும் 11-வது சுற்றில் குகேசும், முதலாவது மற்றும் 12-வது சுற்றில் லிரெனும் வெற்றி பெற்றனர். மற்ற ஆட்டங்கள் ‘டிரா’வில் முடிந்தது.

இதனையடுத்து நேற்று 13வது சுற்று நடைபெற்றது. இந்த சுற்றும் டிராவில் முடிந்தது. இருவரும் தலா 6.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். இதனால் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியது. இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று 14வது சுற்று தொடங்கியது. இதுவும் டிராவில்தான் முடியும் என்ற அளவிற்கு இருவரும் கடுமையான போட்டி கொடுத்து விளையாடி வந்தனர். கிட்டத்தட்ட 4 மணி நேரத்துக்கும் மேல் நடந்த இந்தச் சுற்றில் 58வது நகர்வில் குகேஷ் வெற்றிப் பெற்றார்.

இதன்மூலம் உலக சாம்பியனான மிக இளம் வயது வீரர் எனும் பெருமையை குகேஷ் பெற்றிருக்கிறார். மேலும் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்ற 2வது தமிழக வீரர் எனும் பெருமையையும் பெற்றுள்ளார்.

வெற்றியைத் தொடர்ந்து பேட்டியளித்த குகேஷ்,

“ஒவ்வொரு செஸ் வீரருக்கும் இருக்கும் கனவுதான் இன்று எனக்கு நனவாகியுள்ளது. இரண்டு ஆண்டுகால தீவிர பயிற்சிக்கு பின்னர் இந்த வெற்றிக் கிடைத்துள்ளது. போட்டிக்கு உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் தயாராகி வந்தேன். இந்த நாளுக்காக 10 ஆண்டுகளாக உழைத்தேன்.

தற்போது இளம் செஸ் வீரர் கனவு நனவாகியுள்ளது. டிங் லிரெனின் தோல்விக்கு எனது வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன். 11 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிடமிருந்து உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் பறிக்கப்பட்டது. என்னை நேசித்த நாட்டு மக்களுக்கு இந்த வெற்றியை உரிதாக்குகிறேன்” என தெரிவித்தார்.

Tags :
Advertisement