For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நேற்று திருச்சி... இன்று #Kozhikode... | வானில் வட்டமடித்த விமானம்…நடந்தது என்ன?

12:21 PM Oct 12, 2024 IST | Web Editor
நேற்று திருச்சி    இன்று  kozhikode      வானில் வட்டமடித்த விமானம்…நடந்தது என்ன
Advertisement

மோசமான வானிலை காரணமாக கோழிக்கோட்டில் சுமார் அரை மணி நேரம் வானில் வட்டமடித்த நிலையில், கோவை விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறக்கப்பட்டது.

Advertisement

துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு நோக்கி 164 பயணிகளுடன் ப்ளை துபாய் விமானம் ஒன்று புறப்பட்டது. கோழிக்கோடு விமான நிலையத்தை அடைந்த விமானம் தரையிறங்க தயாரானது. அப்போது வானிலை மிகவும் மோசமாக இருந்ததால், சுமார் அரைமணி நேரமாக அந்த விமானம் வானிலேயே வட்டம் அடித்தது.

இருப்பினும், வானிலை சீராகாமல் இருந்ததால் பாதுகாப்பு கருதி விமானம், கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. இதையடுத்து, கோவை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது. கோழிக்கோடு செல்லவேண்டிய விமானம், கோவை விமான நிலையத்தில் தரையிறங்கியதால் சிறிதுநேரம் அங்கு பரபரப்பு நிலவியது.

அந்த விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு கோவை விமான நிலையத்தில் உரிய வசதிகள் செய்து தரப்படும் என்று விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வானிலை சீரான பின்னர், மீண்டும் விமானம் கோழிக்கோடு விமான நிலையம் புறப்பட்டு செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

நேற்று திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திருச்சி விமான நிலையத்தில் சுமார் 2.35 மணி நேரம் வானில் வட்டமடித்து பின்னர் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. அந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் அதேபோன்ற சம்பவம் மீண்டும் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement