#Kolkata இரவில் பெண்கள் பாதுகாப்புக்கு காவலர்கள் - மே.வங்க அரசு ஆலோசனை!
இரவில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த, மேற்கு வங்க அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த முதுநிலை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடந்த சில நாட்களாள மருத்துவர்கள், செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று (ஆகஸ்ட் -17ம் தேதி ) காலை 6 மணி முதல் நாளை (ஆகஸ்ட் -18ம் தேதி ) காலை 6 மணி வரை ஒருநாள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நாடு முழுவதுமே அனைத்து மருத்துவமனைகளிலும் புறநோயாளிகள் இன்று கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இரவு வேளைகளில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், பெண்களுக்கு உதவியாகவும், பெண் தன்னார்வலர்களைக் கொண்டு ‘ராத்திரெர் ஷாதி’ என்கிற திட்டத்தை அறிமுகப்படுத்த, மேற்கு வங்க அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள் :#Thoothukudi பெரிய கோயில் சனி பிரதோஷம் – திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!
இத்திட்டத்தின் மூலம், அரசு மருத்துவமனைகள் மருத்துவக் கல்லூரிகள், விடுதிகள் மற்றும் பிற இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் உருவாக்கப்படும் என்றும், இத்திட்டம் குறித்து மூத்த உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டிருப்பதாகவும், வெகுவிரைவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.